"நாங்கள் எதிர்பார்த்ததே வேறு.. வேகம் குறையவில்லை".. கொரோனா வைரஸ் பரவல். "ஹு" கடும் எச்சரிக்கை!
நியூயார்க்: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் வேக்சின் போடப்பட்டு வந்தும் கூட கொரோனா வைரஸ் கேஸ்கள் குறையவில்லை, இந்த பெருந்தொற்று வேகம் குறைவது போல தெரியவில்லை என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மீண்டும் புதிய கேஸ்கள் அதிகரித்து வருகிறது. 187,276,192 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11,981,627 பேர் உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 4,042,981 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கொரோனா
இந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் கேஸ்கள் நாளைடைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகின் பெரும்பகுதியில் கொரோனா வைரஸ் கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை.

வேகம்
வைரஸ் இன்னும் வேகமாக பரவி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. வேக்சின் அதிகமாக போடப்பட்ட சில நாடுகளில் மக்கள் மருத்துவமனைக்கு செல்வது குறைந்து இருக்கிறது. மக்கள் மருத்துவமனையில் சீரியஸாக அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 5 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளது.

ஆபத்து
இதன் அர்த்தம் கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை, பெருந்தொற்றின் வேகம் இன்னும் குறையவில்லை என்பதுதான். அதோடு ஆப்ரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் புதிய கேஸ்கள் 40% உயர்ந்துள்ளது. டெல்டா வகை பரவல் இதற்கு ஒரு காரணம். மெதுவாக வேக்சின் அளிப்பதும் ஒரு காரணம். பல நாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.

தளர்வு கவனம்
கட்டுப்பாட்டு தளர்வுகளை கொண்டு வரும் போது அரசு கவனமாக இருக்க வேண்டும். உலகில் எங்கெல்லாம் தளர்வுகள் உள்ளதோ அங்கெல்லாம் கேஸ்களும் வர தொடங்கி உள்ளது என்பதை தலைவர்கள் உணர வேண்டும். எல்லோரும் மொத்தமாக வெளியே செல்லும் அளவிற்கு தளர்வுகளை கொண்டு வருவது ஆபத்து.
Recommended Video

வேகம் குறையும்
கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குறையவில்லை. தளர்வுகளை கொண்டு வருவதன் மூலமும், வேக்சின் வேகம் குறைந்ததன் மூலமும் மக்கள் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும், என்று சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications