மோடி சிக்னலுக்காக காத்திருந்த நெதன்யாகு? 48 மணி நேர ராஜதந்திர மூவ்.. ஈரானைத் தூக்கிய பக்கா ஸ்கெட்ச்
ஜெருசலேம்: "நண்பரே... உங்கள் வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது!" - பிப்ரவரி 26 அன்று பிரதமர் நரேந்திர மோடியைக் கட்டியணைத்து வழி அனுப்பிவைத்தபோது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கண்களில் ஒரு விசித்திரமான மின்னல் தெரிந்தது. அந்த மின்னலின் அர்த்தம் என்னவென்று அப்போது யாருக்கும் தெரியாது. ஆனால், மோடி ஏறிய ஏர் இந்தியா விமானம் இஸ்ரேல் வான் எல்லையைத் தாண்டி, இந்தியா நோக்கிப் பறக்கத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே உலகமே அதிரும் அந்தச் செய்தி வெளியானது!
ஏன் காத்திருந்தார் நெதன்யாகு?
கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி இஸ்ரேலில் இருந்தார். அந்த இரண்டு நாட்களும் இஸ்ரேல் ராணுவம் (IDF) மற்றும் மொசாட் ஆகியவை தங்களது அனைத்து 'அதிரடி' திட்டங்களையும் உறையில் போட்டு மூடி வைத்திருந்தன.

காரணம் இதுதான்:
ராஜதந்திர மரியாதை: இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு உண்டு. மோடி இஸ்ரேல் மண்ணில் இருக்கும்போது ஈரானைத் தாக்கினால், அது இந்தியாவைச் சங்கடத்தில் ஆழ்த்தும் என நெதன்யாகு கருதினார்.
பாதுகாப்பு வளையம்: ஈரானின் பதிலடித் தாக்குதல் ஒருவேளை மோடி அங்கு இருக்கும்போது நிகழ்ந்தால், அது மிகப்பெரிய சர்வதேசப் பிரச்சனையாக மாறும். வான்வெளியை மூட வேண்டி இருக்கும். மோடி இமேஜ் பாதிக்கும்.
இஸ்ரேல் நடத்திய தரமான திசைதிருப்பல் மூவ்
மோடியின் வருகையை உலக ஊடகங்கள் கவனித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, ஈரானியத் தலைவர்களை ஏமாற்றி ஒரே இடத்திற்கு வரவழைத்தது மொசாட். கிட்டத்தட்ட உலக நாடுகளை புகையை போட்டு ஏமாற்றி உள்ளது இஸ்ரேல்.
"டாடா" காட்டிவிட்டுத் தொடங்கிய வேட்டை!
பிப்ரவரி 26 மாலை மோடி இஸ்ரேலை விட்டுப் புறப்பட்டார். அடுத்த 24 மணி நேரம் நிசப்தமாக இருந்தது. பிப்ரவரி 28 அதிகாலை 8:15 மணி... உலகம் இன்னும் உறக்கத்திலிருந்து எழாத அந்த நேரத்தில், 200 போர் விமானங்கள் ஈரானின் வான் எல்லைக்குள் புகுந்தன.
கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கக் கூடியிருந்த அதே தருணத்தில், கால இடைவெளியில் ஏவுகணைகள் பாய்ந்தன. "மோடி வந்துவிட்டுப் போயிருக்கிறார், இப்போது பெரிய தாக்குதல் நடக்காது" என ஈரான் அசந்திருந்த நேரத்தைப் பார்த்தே இந்த ஸ்கெட்ச் போடப்பட்டது என்கிறார்கள் ராஜதந்திர நிபுணர்கள். ஒரே கூரைக்கு கீழ் இருந்த மொத்த டாப் தலைவர்கள் குழுவும் ஒரே அட்டாக்கில் தீர்த்து கட்டப்பட்டது.
இந்தியாவுக்குத் தெரியுமா?
"மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் குறித்து மோடி - நெதன்யாகு ஆலோசனையில் பேசப்பட்டது" என வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால், இவ்வளவு பெரிய தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது இந்தியாவுக்குத் தெரியுமா? என்பதுதான் இப்போதைய மர்மக் கேள்வி.
எது எப்படியோ, மோடியின் 'ராஜதந்திரப் பயணம்' முடிந்த கையோடு ஈரானின் 'ஆட்சிக் கட்டில்' சரிந்துவிட்டது. இது தற்செயலான நிகழ்வா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட ராஜதந்திர நகர்வா என்பது வரும் நாட்களில் தெரியவரும்!
எப்படியும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரனை தாக்கத்தான் போகிறது என்று தெரிந்துதான், அவசரமாக மோடி இஸ்ரேல் சென்று திரும்பி விட்டார் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications