தோளில் சட்டென "கை" போட்ட அதிபர்.. சங்கடப்பட்டு நெளிந்த சிறுமி.. அப்படி என்ன சொன்னார் ஜோ பிடன்..!!
சிறுமிக்கு அதிபர் ஜோ பிடன் சொன்ன அட்வைஸ் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
நியூயார்க்: சிறுமி ஒருவரின் தோளில் கைபோட்டு, அமெரிக்க அதிபர் அந்த சிறுமிக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றை தந்துள்ளார்.. இந்த நிகழ்வு, ஒருபக்கம் மிகுந்த பாராட்டையும், மறுபக்கம் சர்ச்சையையும் தாங்கி வலம் வந்து கொண்டிருக்கிறது.
இர்வின் வேலே கம்முநிட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதிபர் ஜோ பிடன் பங்கேற்றார்.. அப்போது, நிகழ்ச்சியின் முடிவில் அதிபருடன் போட்டோக்கள் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதில் சிறுமி ஒருவர் அதிபருடன் போட்டோ எடுக்க ஆசை ஆசையாக சென்றுள்ளார்.. சிறுமியை கண்டதுமே, அதிபர் ஜோ பிடன், அவரது தோளில் கைபோட்டு, சிறுமிக்கு வாழ்க்கையின் டேட்டிங் குறித்த ஆலோசனையை தந்துள்ளார்..

டேட்டிங்
சிறுமியிடம் அதிபர் பேசும்போது, "நான் என்னுடைய மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு என்ன சொன்னேன் தெரியுமா? என்று ஆரம்பித்து, 30 வயது வரும் வரை உண்மையான உறவில் ஆண்கள் வேண்டாம்.. 30 வயது வரை டேட்டிங் கூடவே கூடாது.. 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியஸாக நடந்து கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்... இதைக்கேட்டதுமே அந்த சிறுமி தர்மசங்கடமாக உணர்ந்துள்ளதாக தெரிகிறது..

நெளிந்த மாணவி
எனினும் அதிபரிடம், "நான் உங்கள் அறிவுரையை நினைவில் வைத்து கொள்கிறேன்" என்று நெளிந்தவாறே, ஒருவித தயக்கத்துடன் சொல்லி சிரித்துள்ளார். உடனே இதனை பக்கத்திலேயே நின்றிருந்த மீடியாக்காரர் ஒருவர் வீடியோ எடுத்து, அவரது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துவிட்டார்.. அந்த வீடியோதான் தற்போது வேகமாகப் பரவி வருகிறது... வீடியோ பதிவிட்ட கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, 5.2 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து சென்றுக் கொண்டியிருக்கிறது.. இதற்கு பலதரப்பட்ட கருத்துகள் குவிந்தபடி உள்ளன..

முகசுளிப்பு
இந்த வீடியோவை பதிவிட்ட அந்த பத்திரிக்கையாளர், "அதிபர் ஜோ பிடன் சொன்னது, அந்த சிறுமியை சங்கடத்திற்கு உள்ளாகிவிட்டது"என்று குறிப்பிட்டுள்ளார்.. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. ஆமாம், வழக்கத்திற்கும் மாறான செயல்களில் ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார்.. என்ன இருந்தாலும், உரையாடலின்போது முகம் சுளிக்கும் வகையில் பிடன் நடந்து கொண்டிருக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்... ஆனால், இதற்கு மாறுபட்ட கருத்தை பெரும்பாலானோர் சொல்லி வருகின்றனர்.

தப்பான அட்வைஸ்?
மாணவிகளுடன் சாதாரணமாக பேசியதைகூட தவறாக பார்க்கக்கூடாது, தன் மகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சொன்னதைபோல்தான் சிறுமிக்கும் பிடன் அறிவுரை சொல்லி உள்ளார். இதில் தவறேதும் இல்லை என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. இதுவரை 50 லட்சம் முறை இந்த வீடியோ பார்வையிடப்பட்டுள்ள நிலையில், பலரும் வேகமாக இதே வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications