பெரிய ஆப்பு.. வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. டிரம்ப் போட்ட பரபரப்பு உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல்களை திட்டமிடுவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த வழிகாட்டுதல் வழங்கப்படும் வரை புதிய மாணவர் சேர்க்கை அல்லது மாணவர் பரிமாற்ற (F, M, மற்றும் J) விசா வழங்குவதை நிறுத்துமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

USA Donald Trump Visa

பின்வரும் காரணங்களுக்காக விசா நடைமுறைகள் நிறுத்தப்பட்டு உள்ளன,

1. வெளிநாட்டு மாணவர்களின் இந்த கல்விக்கு நிதி செலவு செய்ய டிரம்ப் விரும்பவில்லை. அடுத்தடுத்து பல பல்கலைக்கழகங்களின் நிதியை டிரம்ப் நிறுத்தி வருகிறார்.

2. இடதுசாரி கொள்கை கொண்ட மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருவதாக போராட்டம் செய்வதாக அவர் குற்றச்சாட்டு வைக்கிறார்.

3. அமெரிக்க மாணவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக புகார் வைக்கிறார்.

4. மாணவர் விசாவில் வருபவர்கள் இங்கே காசு சம்பாதிக்க வேலை பார்க்கும் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

5. சிலர் விசா காலம் முடிந்த பின் இங்கே ஓவர் ஸ்டே செய்கிறார்கள்.

இதையடுத்தே வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல்களை திட்டமிடுவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.

இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது தாங்கள் சேர்ந்துள்ள கல்வி திட்டங்களை விட்டு வெளியேறுவது குறித்து கடுமையான எச்சரிக்கைகளை அமெரிக்கா விடுத்துள்ளது. இது போன்ற தவறுகளை செய்தால் மாணவர்கள் தங்கள் விசாக்களை இழக்க நேரிடும் அல்லது எதிர்காலத்தில் எந்த அமெரிக்க விசாவிற்கும் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம் என்று கூறி உள்ளது.

நீங்கள் சேர்ந்துள்ள கல்வி திட்டத்தை, படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது உங்கள் படிப்புத் திட்டத்தை உங்கள் கல்வி நிறுவனத்திடம் முறையாக தெரிவிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை நீங்கள் இழக்க நேரிடும். இது பிரச்சினையை தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, கல்லூரிக்கு தவறாமல் செல்லவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் லிஸ்டை கணக்கெடுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த திட்டத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள்.

2. அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள்.

3. சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.

4. இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள்.

5. இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+