நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம்! ஆட்சிக்கு வரும் முதல்நாள்.. டிரம்ப் விடுத்த வார்னிங்
நியூயார்க்: நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம். எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது அந்த அளவிற்கு மிக மோசமான நிலைமை உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று நிகழ்த்திய உரையில், நான் ஆட்சிக்கு வந்ததும்.. நாளை மாலையில் இருந்து நாட்டில் இருந்து வந்தேறிகள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைன் போரை நான் முடிவிற்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வருகிறது. அந்த போர்களை நான் மொத்தமாக முடிவிற்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கு நாடுகளில் கண்டிப்பாக அமைதி திரும்பும்.

இதன் மூலம் 3ம் உலகப்போர் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். நாம் 3ம் உலகப்போருக்கு மிக அருகில் இருக்கிறோம். எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது அந்த அளவிற்கு மிக மோசமான நிலைமை உள்ளது. அதை சரி செய்வேன். இன்று இருப்பதை விட 3-ம் உலகப் போருக்கு நாம் நெருக்கமாக இருந்ததில்லை. அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் சரியாக இல்லை.
நான் இருந்தால் இந்த போரை நிறுத்துவேன். ஒரே நாளில் போரை நிறுத்துவேன். கமலா ஹாரிஸின் தவறான முடிவுகள் காரணமாக நமது வெளியுறவுக்கொள்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரால் இந்த போரை எல்லாம் நிறுத்த முடியாது. நான் வந்த உடன் இந்திய போர்களை நிறுத்துவதற்கான பணிகளை செய்வேன் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்து உள்ளார்.
4 வருடமாக அமெரிக்கா சரிந்து வந்தது. அந்த சரிவை நான் முடிவிற்கு கொண்டு வருவேன். இனிமேல் அமெரிக்கா சரியாது. அதை முடிவிற்கு கொண்டு வருவேன், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
உலகப்போர் எச்சரிக்கை:
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மூன்றாம் உலகப் போரைப் பற்றி ஒரு கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல்கள் உலகளாவிய போராக விரிவடையும் என்று டிமோன் எச்சரித்து உள்ளார். மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார். இந்த மோதல்களைத் தூண்டுவதில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நாடுகள்தான் போருக்கு காரணமாக அமையும்.
உலகளாவிய மோதலின் அபாயம் அதிகரிக்கும் போது, போர் கண்டிப்பாக வரும். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் ஆகிய போர்கள் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா ஆகிய இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்டு பிரிவினை இதுவரை இல்லாத மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளாராம். முக்கியமாக பனிப்போரை விட மோசமான சூழலை இரண்டு நாடுகளும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்டநிலையில் தான் உலகப்போர்களை முடிவிற்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications