வரும்.. ஆனா.. வராது! ஈரான் போர் முடியுமா? முடியாதா? மிகத் தெளிவாகக் குழப்பும் டிரம்ப்! அடுத்து என்ன?
நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்திய நிலையில் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப். அதே நேரத்தில் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என அவர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய நிலையில், பல வாரங்களாக நடந்து வந்த நிலையில், இரு தரப்பிலும் உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உலக அளவில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

இந்நிலையில், பல உலக நாடுகளில் அழுத்தம் காரணமாக இரு நாடுகளும் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாததால், பதற்றம் முழுமையாக குறையவில்லை.
அமெரிக்கா ஈரான்
இந்த சூழ்நிலையில், முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அந்தப் பகுதியில் நுழைய சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் மற்ற நாடுகளின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை.
டொனால்ட் டிரம்ப்
இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது என்றாலும், இன்னும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும், ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என இரு மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார் டிரம்ப்.
ஈரானின் அணுசக்தி
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் முடியும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களை இப்போது நிறுத்தினால் கூட, ஈரான் நாட்டின் கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். மேலும், ஈரானின் அணுசக்தி தொடர்பான திட்டங்களை தடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.
இஸ்லாமாபாத்
ஈரானின் அணு திறனை பாதிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவசியமானவை. தற்போது ஈரான் தரப்பும் ஒப்பந்தம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது" என ட்ரம்ப் குறிப்பிட்டார். இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக இஸ்லாமாபாத் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இழுபறி நிலை
முன்னதாக அங்கு நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நீடித்திருந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக, ஈரான் அணு ஆயுத திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், அமெரிக்க தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தான் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலையை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே! -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications