சீனாவின் கைக்கு போன இந்தியா.. அமெரிக்காவின் அழிவு காலம் இது.. டிரம்பிற்கு போன கடுமையான வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்த வரி விதிக்கப்படவில்லை, டிரம்ப் ஈகோ காரணமாக இப்படி செயல்படுகிறார், அவரின் செயல் தவறானது என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் வைத்துள்ளனர்.
மூன்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியா போன்ற நட்பு நாடுகளை ரஷ்யா மற்றும் சீனாவிடம் தள்ளி, மாஸ்கோ முதல் பியோங்யாங் வரையிலான சர்வாதிகாரத் தலைவர்களுக்கு அவர் ஊக்கமளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்துவதோடு, உலகை ஆபத்தான இடமாக டிரம்ப் மாற்றுகிறார்கள், அமெரிக்க அரசியலின் அழிவு காலம் இது என்று நியூயார்க்கின் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ், வாஷிங்டனின் ஆடம் ஸ்மித், கனெக்டிகட்டின் ஜிம் ஹிம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
டிரம்பிற்கு எச்சரிக்கை
இவர்கள் அனைவரும் வெளியுறவுக் கொள்கை, ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை குழுக்களின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள். உக்ரைன் போர் கையாளுதல் முதல் அமெரிக்கப் நட்பு நாடுகளுக்கெதிரான பொருளாதார நடவடிக்கைகள் வரை டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகளை இவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கெதிரான அதிபரின் வர்த்தக வரிவிதிப்புகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவையும் பிற நாடுகளையும் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவின் கைகளில் தள்ளிவிடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
இந்த நடவடிக்கை உக்ரைன் விவகாரம் பற்றியது அல்ல என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் வாதிடுகின்றனர். இந்த வரி விதிப்பானது அமெரிக்க-இந்தியா உறவுகளைப் பாதிக்கும் என்றும், அமெரிக்கர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா மோதல்
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன.
டிரம்ப் ஈகோ
அமெரிக்க பிரதிநிதிகள் சபை வெளியுறவு கமிட்டியின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது உக்ரைன் பற்றியது போல இல்லை.. டிரம்ப் ஈகோ காரணமாக இப்படி செய்துள்ளனர் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் சீனா போன்ற மற்ற நாடுகளுக்கு வரி விதிக்காமல், இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைத்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வரி விதிப்பு ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மாஸ்கோவின் போரை இது நிறுத்தப் போவதில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்கு வரி விதிப்பது புடினை நிறுத்தாது. டிரம்ப் உண்மையிலேயே ரஷ்யாவின் சட்டவிரோத உக்ரைன் படையெடுப்பைத் தடுக்க விரும்பினால், புடினைத் தண்டித்து, உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவியை வழங்க வேண்டும். மற்ற அனைத்தும் வெற்று சடங்குகள் தான்" என்று அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் இது குறித்து அமெரிக்காவிற்கு தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியா நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் சேர்வதால், இந்தியா நீண்டகால பாதுகாப்பைப் பெறாது. இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை. இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகள் குறித்துச் செய்யும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,
இந்தியா சீனாவுடன் நெருக்கமாக விடக்கூடாது. நம்முடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் டிரம்ப் அதற்கு எதிராக செயல்படுகிறார். அதை அனுமதிக்க கூடாது என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications