பனாமா கால்வாயை கைப்பற்றும் டிரம்ப்? படையை குவிக்கும் அமெரிக்கா.. வெள்ளை மாளிகை போட்ட உத்தரவு
நியூயார்க்: பனாமா நாட்டின் பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பனாமா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பனாமா கால்வாயை கைப்பற்றும் முடிவில் உறுதியாக உள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவை
பிறப்பித்துள்ளார்.
பனாமா என்பது மத்திய அமெரிக்க நாடாக உள்ளது. இந்த நாடு என்பது அளவில் மிகவும் சிறியது. கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பனாமாவில் மொத்தம் 36 லட்சம் மக்கள் இருந்தனர். தற்போது அதனை விட கொஞ்சம் அதிகமான மக்கள் இருக்கலாம்.

மிகச்சிறிய நாடாக இருந்தாலும் கூட பனாமா என்பது அனைத்து நாடுகளுக்கு மிகவும் முக்கியமான இடமாகும்.
ஏனென்றால் இந்த பனாமாவில் தான் பனாமா கால்வாய் என்பது உள்ளது. இந்த பனாமா கால்வாய் என்பது சர்வதேச கடல்வழி போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் வகையில் இந்த பனாமா கால்வாய் 82 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இந்த கால்வாய் என்பது இயற்கையாக அமைந்தது இல்லை. செயற்கையாக அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் இல்லாதபோது 11 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு சுற்றி கடல்வழி வர்த்தகம் செய்யும் நிலை இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்பதாக பிரெஞ்சு அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. ஆனால் நிதி பிரச்சனை, தொழிலாளர்களின் தொடர் இறப்பு உள்ளிட்டவற்றால் இது கைவிடப்பட்டது.
அதன்பிறகு 1904ம் ஆண்டு அமெரிக்கா இந்த திட்டத்தை கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்தது. 1914ல் இந்த பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. இந்தக் கால்வாய் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களின் பயண நேரத்தை குறைப்பதோடு, எரிபொருள் பயன்பாட்டையும் அதிகளவில் மிச்சப்படுத்துகிறது. இந்த கால்வாயை ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக அமெரிக்க கப்பல்கள் அதிகமாக இந்த கால்வாயை பயன்படுத்தி வருகின்றன. முதலில் இந்த பனாமா கால்வாயை இதற்கு முன்பு அமெரிக்கா தான் நிர்வகித்து வந்தது. ஆனால் 1977 ல் மக்கள் எதிர்ப்பால் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்த பனாாமா கால்வாயை பனாமா அரசிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்நிலையில் தான் தற்போது பனாமா அரசுக்கும், சீனாவுக்கும் நெருக்கமான உறவு என்பது உள்ளது. பனாமா கால்வாயில் சீனாவின் ஆதிக்கம் அதிரித்துள்ளதோடு, அமெரிக்க கப்பல்களுக்கு பனாமா அரசு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.. இந்த குற்றச்சாட்டை சீனா மற்றும் பனாமா அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
இந்நிலையில் தான் பனாமா கால்வாயை கைப்பற்றும் முடிவில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். பனாமா கால்வாயை அமெரிக்கா தான் உருவாக்கியது. இந்த கால்வாயில் பிற நாடுகளின் பங்கு என்பது இல்லை. இந்த பனாமா கால்வாய் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இந்த கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று கூறினார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற உடன் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்தார். இந்நிலையில் தான் வெள்ளை மாளிகை சார்பில் அமெரிக்கா ராணுவத்துக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பனாமாவில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை உடனடியாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பனாமாவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் செல்வாக்கை உயர்த்த முடியும் என்று டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார். அதுமட்டுமின்றி பனாமா கால்வாயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications