எலான் மஸ்க் டீமில் இந்திய வெறுப்பாளர்! வெளியே வந்த ஷாக்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்த எலான் மஸ்க் தலைமையில் DOGE என்கிற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய வெறுப்பாளர் இடம் பெற்றிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

'இந்திய வெறுப்பை சாதாரணமானதாக மாற்றுங்கள்' என்று அந்த நபர் கூறியிருந்திருக்கிறார். விஷயம் வெளியே தெரிந்த பின்னர் சைலன்ட்டாக ராஜினாமா செய்திருக்கிறார். வெளியில் தெரிந்தது இது ஒன்றுதான். தெரியாதது இன்னும் எவ்வளவு இருக்கிறதோ? என்று அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

elon musk us

இந்த செய்தியை அமெரிக்க ஊடகமான 'தி வால் ஸ்ட்டீட் ஜார்னல்' (The Wall Street Journal) வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அதாவது எலான் மஸ்க் தலைமையிலான திறன் மேம்பாட்டு துறையில்(DOGE) 'மார்கே எலஸ்' எனும் 25 வயது இளைஞர் பணியாற்றி வந்திருக்கிறார். அமெரிக்க பொதுத்துறைகளின் செலவீனங்களை ஆய்வு செய்வதுதான் இவர் பணி. ஆனால் இவரின் கடந்தகால சோஷியல் மீடியா போஸ்ட்கள் சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கிறது.

அதாவது கடந்த ஜூலையில், "சும்மா தகவலுக்காக சொல்கிறேன்.. நான் ஒரு காலத்தில் இனவாதியாக இருந்தேன். அது நன்றாக இருந்தது" என பதிவிட்டிருந்திருக்கிறார். சரி அதோடு நிறுத்தினாரா என்று கேட்டால் கிடையாது. செப்டம்பர் மாதம், "பணம் வாங்கிக்கொண்டு என் இனத்தை சேராதவரை திருமணம் செய்துக்கொள்ளும் ஆள் நான் கிடையாது" என மற்றொரு போஸ்ட் போட்டு சலசலப்பை கிளப்பியிருக்கிறார்.

சரி அவ்வளவுதானே, இந்தியாவில்கூடதான் சாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்துக்கொள்ள பலரும் யோசிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று நீங்கள் கேட்கலாம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தியர்கள் மற்ற மதம்/சாதியினரின் உணர்வுகளை புண்படுத்த மாட்டார்கள். ஆனால் மார்கே எலஸ், இதை செய்திருக்கிறார். "இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்" என்று சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்திருக்கிறார்.

DOGE டீமில் சேர்வது சாதாரணமான விஷயம் கிடையாது. நிறைய படிப்பும், அறிவும், தொழில்நுட்ப திறமையும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். இதையெல்லாம் கற்று தேர்ந்து என்ன பிரயோஜனம்? மார்கே எலஸ் மண்டையில் இனவாத கருத்து அப்பட்டமாகே இருக்கிறதே! என 'தி வால் ஸ்ட்டீட் ஜார்னல்' ஊடகம் விஷயத்தை பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தது.

இது குறித்து எலான் மஸ்க்கிடம் விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பியிருந்தது. அவர்கள் காதும், காதும் வைத்தார் போல பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.

விளைவு, மார்கே எலஸ் ராஜினாமா செய்துவிட்டார். சட்டப்படி, இவரது இனவாத கருத்துகளுக்கு அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. வெளியில் தெரிந்தது மார்கே எலஸ் எனும் ஒருவர் மட்டும்தான். அவரைப்போல இன்னும் எத்தனை பேர் எலான் மஸ்க்கின் டீமில் இருக்கிறார்களோ? என்கிற அச்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அமெரிக்காவில் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 1.4%தான். ஆனால் இவர்களால் அமெரிக்க பொருளாதாரம் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இன்றும் டெக் நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் பல சாதனைகளுக்கு பின்னால் இந்தியர்களின் அபரிமிதமான உழைப்பு இருக்கிறது. இதற்காக இந்தியர்களை அங்கீகரிப்பதற்கு பதில், இனவாத கருத்துக்களால் அழிக்க நினைப்பது முட்டாள்தனம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+