அடுத்து கோகோ கோலா கம்பெனி என்ன விலைனு கேளு.. வாங்கி போடலாம்.. கோகைனை கலக்கலாம்.. எலான் மஸ்க் ட்வீட்
நியூயார்க்: சமூகவலைதளமான ட்விட்டரின் மொத்த பங்குகளையும் ஓவர் நைட்டில் விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் தற்போது கோகோ கோலா நிறுவனத்தையும் விலைக்கு வாங்க போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குதாரராக இருந்தவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். உலக பணக்காரர்களில் முன்னணி இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை என கூறி வந்தார். மேலும் ஒரு ட்வீட்டிற்கு 280 எழுத்துகள் மட்டுமே டைப் செய்ய முடியும் என்பது போதாது என்றும் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் ட்விட்டரின் மொத்த பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ட்விட்டரின் மொத்த பங்கு
இதையடுத்து ஒரு கட்டத்தில் ஓவர் நைட்டில் ட்விட்டரின் மொத்த பங்குகளையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதில் பல மாற்றங்களை செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை எலான் மஸ்க் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி அதனுடன் கோகைனை சேர்க்க போகிறேன் என ட்வீட் போட்டிருந்தார்.

கருத்துகள்
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். எலான் மஸ்க் விளையாடுகிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் கமென்ட் போட்டனர். ட்விட்டரில் கருத்து சுதந்திரத்தை ஆதரித்தால் வெறுப்பு பேச்சுகளும் உமிழப்படும் என சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் எலான் மஸ்க்கின் கோகைன் ட்வீட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்வீட்டில் நகைச்சுவை
இதையடுத்து அடுத்த ட்வீட்டில் நான் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தேன் என தெரிவித்திருந்தார். இதற்கு முன் மெக் டொனால்ட்டை வாங்கி அங்கு அனைத்து ஐஸ்கிரீம் இயந்திரங்களையும் பொருத்த போகிறேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அடுத்த ட்வீட்டில் என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது என பதிவிட்டிருந்தார்.

நடுநிலை
எலான் மஸ்க் ட்விட்டர் தொடர்பாகவும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ட்விட்டரில் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் இருக்க வேண்டும். எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது. பொது நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் ரீதியாக ட்விட்டர் நடுநிலையுடன் இருக்க வேண்டும். நடுநிலை என்றால் தீவிர வலதுசாரியோ தீவிர இடது சாரியோ என கோபப்படுவார்கள் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சிலோன் மஸ்க்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கையை எலான் மஸ்க் வாங்க வேண்டும் என நெட்டிசன்கள் அவருக்கு ட்வீட் போட்டனர். மேலும் சிலர் இலங்கை எலான் மஸ்க் வாங்கிக் கொண்டு சிலோன் மஸ்க் என பெயரிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications