போதும்பா! சத்தமே இல்லாமல்.. டிரம்ப்பின் ப்யூஸை பிடுங்கிய எலான் மஸ்க்.. அமெரிக்க அரசியலில் ட்விஸ்ட்
நியூயார்க்: சத்தமே இல்லாமல் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ப்யூஸை பிடுங்கி உள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த 5-6 வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேரடியாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஒரு காலத்தில் ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக தீவிர வலதுசாரியாக மாறி குடியரசு கட்சி ஆதரவாளராக மாறிவிட்டார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடியாக எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு கொடுத்தார். அதோடு அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு நிதி வழங்கினார். அந்த தேர்தலில் டிரம்ப் ஜெயிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக டிரம்ப் மாறினார்.
டிரம்ப் எலான் மஸ்க் கருத்து வேறுபாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.
இதன் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. அதோடு இந்த குழு காரணமாக டிரம்ப் - எலான் மஸ்க் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் கூட ஏற்பட்டது.
என்ன கருத்து வேறுபாடு?
சமீபத்தில் பென்டகன் அமைப்பின் சில போர் ரகசியங்கள் கசிந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா போர் செய்வதாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று DOGE தலைவர் எலான் மஸ்க்கிடம் விளக்கப்பட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பென்டகன் உடன் கடந்த மாதம் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதே சமயம் சீனா உடன் போர் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பென்டகன் ஆலோசனை நடத்துவதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனை செய்யலாம் என்றும் மஸ்க் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதை டிரம்ப் மறுத்தார். இந்த விவகாரம் பெரிதானதும் அலறியடித்து பதில் சொன்ன டிரம்ப்.. அப்படி ஆலோசனை நடக்கவில்லை என்று கூறி இருந்தார். அதே சமயம் பென்டகன் அளித்த விளக்கத்தில் பென்டகன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் போர் பற்றி எல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனா உடன் போர் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டு டிரம்ப் அதிர்ச்சி அடைந்ததாகவும்.. இனிமேல் மஸ்க்கிடம் இது போன்ற விவரங்களை விவாதிக்க கூடாது.. அங்கே அவருக்கு என்ன வேலை.. நீங்கள் அவரிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்றும் டிரம்ப் பென்டகன் அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகல்
இந்த நிலையில் அரசியலில் நிதி அளிப்பதை நிறுத்த போவதாக அல்லது அடியோடு குறைக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுவரை நிறைய கொடுத்துவிட்டேன்.. இனி கொடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
அவருக்கு தனிப்பட்ட வகையில் பொருளாதார சிக்கல் மற்றும் அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக டெஸ்லா பங்குகள் சரிவு உள்ளிட்ட காரணங்களால் அரசியலில் நிதி அளிப்பதை நிறுத்த போவதாக அல்லது அடியோடு குறைக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். நான் நிறைய செய்துவிட்டேன் போதும் இனி செய்ய விரும்பவில்லை என்று மஸ்க் கூறி உள்ளார். அவரின் இந்த முடிவு டிரம்பிற்கும் அவரின் குடியரசு கட்சிக்கும் புதிய நெருக்கடியை தரும் என்று கருதப்படுகிறது.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
SpaceX: நினைச்சதொன்னு, நடந்ததொன்னு.. எலான் மஸ்க்-கிற்கே ஆனந்த கண்ணீர் வரவைத்த சம்பவம்! -
யாரு சாமி நீ.. 10479733000000 ரூபாய்.. எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு.. உலகின் முதல் Trillionaire! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications