அடர்ந்த காட்டுக்குள் இருந்த 20 வருட பழைய பஸ்.. ஹெலிகாப்டர் மூலம் தூக்கிய போலீஸ்.. உருக்கமான பின்னணி!
நியூயார்க்: அடர்ந்த அமெரிக்காவின் அலாஸ்கா காட்டுக்குள் இருக்கும் 20 வருட பழமையான பிரபல பச்சை நிற பேருந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம்தான் "Into the Wild". 2007ல் வெளியான இந்த படம் சியான் பெண் மூலம் எடுக்கப்பட்ட படம் ஆகும். எமிலி ஹிர்ச் இந்த படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் அடைந்தார்.
இந்த படம் 1992ல் எழுதப்பட்ட "Into the Wild" புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஜான் கிரக்கர் எழுதிய இந்திய புத்தகம் இப்போதும் உலகின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது. அட இந்த புத்தகத்திற்கும் அலாஸ்காவில் ஹெலிகாப்டர் மூலம் தூக்கப்பட்ட பேருந்துக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.. காரணம் இருக்கிறது.

என்ன சம்பந்தம்
"Into the Wild" கதை ஒரு உண்மை சம்பவம் ஆகும். 1990 தொடக்கத்தில் கிறிஸ் மெக்கேண்டல்ஸ் என்ற இளைஞர் தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டு ஊர் உலகம் எல்லாம் நாடோடி போல தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தது பற்றிய கதை ஆகும் இது. வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள பல ஊர்களுக்கு தெரு தெருவாக இவர் சுற்றி இருப்பார்.

பேருந்து
கடைசியில் அலாஸ்காவில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் சென்று தனியாக குடி இருப்பார். அங்கு இருக்கும் பழைய பேருந்து ஒன்றில் தனியாக வசிக்க தொடங்குவார். 1992ல் அங்கு சென்ற அவர் மொத்தம் 114 நாட்கள் உள்ளேயே வசித்து வந்தார். இதை எல்லாம் அவர் தனது டைரி குறிப்புகளில் எழுதியும் இருந்தார். பின் நாட்களில் அந்த டைரி குறிப்புகள்தான் புத்தகமாகவும் வந்தது.

மரணம் அடைந்தார்
அதன்பின் பசி கொடுமை தாங்காமல் விஷ மூலிகை ஒன்றை கிறிஸ் மெக்கேண்டல்ஸ் உட்கொண்டார். இதனால் அங்கேயே அவர் மரணம் அடைந்தார். பல நாட்கள் கழித்து அவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ் மெக்கேண்டல்ஸ் பற்றிய கதை படமாக வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படம் ஹிட் அடித்த நிலையில் பலரும் அந்த பேருந்தை பார்க்க ஆர்வம் கொண்டனர்.

ஆபத்தான காடு
மிகவும் ஆபத்தான அடர்ந்த அலாஸ்கா காட்டுக்குள் இருக்கும் இந்த பேருந்தை காண நூற்றுக்கணக்கில் மக்கள் சாகச பயணம் செல்வது உண்டு. இப்படி செல்லும் பலர் காட்டுக்குள்ளேயே வழி தவறி சென்று தவித்தது உண்டு. அதேபோல் இன்னொரு பக்கம் பலர் அந்த காட்டுக்கு உள்ளேயே சிக்கி பலியானதும் உண்டு. இப்படி தொடர்ச்சியாக நிறைய சம்பவங்கள் அங்கே நடந்தது.

நீக்கப்பட்டது
இதை தடுக்கும் வகையில் தற்போது அந்த பேருந்து அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் உதவியுடன் இந்த பேருந்து நீக்கப்பட்டது. காட்டுக்குள் சென்ற ஹெலிகாப்டர் கொக்கி போட்டு அந்த பேருந்தை தூக்கி எடுத்து சென்றது. தற்போது நீக்கப்பட்டுள்ள இந்த பேருந்தை விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்க அலாஸ்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த காட்டில் இருந்து பேருந்தை நீக்கியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications