வானத்தையும் விடலையா நீங்க.. "பார்ட்னர்" வங்கி கணக்கை விண்வெளியில் இருந்தபடி நோட்டம் விட்ட பெண்!
நாசாவில் முதல் குற்றம் நிகழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நியூயார்க்: விஞ்ஞான ரீதியிலான ஊழல்.. இது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் விண்வெளிக் குற்றம் தெரியுமா.. அது மட்டும்தான் இதுவரை நடக்கலை. அதையும் நடத்திட்டாங்க இப்ப.
நாசாதான் இந்தப் பஞ்சாயத்தை இப்ப விசாரிச்சிட்டிருக்கு. அதாவது விண்வெளி வீராங்கனை ஒருவர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி பூமியில் உள்ள தனது முன்னாள் பார்ட்னரின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விண்வெளி வரலாற்றிலேயே இப்படி ஒரு புகார் இதுவரை எழுந்ததில்லை. அந்த வகையில் ஆன்னி மெக்ளெய்ன் வரலாறு படைத்து விட்டார். இவர்தான் அந்தா விண்வெளி வீராங்கனை. அதாவது இவர் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்தவர். லிவிங் டூ கெதராக வாழ்ந்தவர்.

புகார்
இதுகுறித்து ஆனி கூறுகையில் நான் மாஜி பார்ட்னரின் வங்கிக் கணக்கைப் பார்த்தது உண்மைதான். ஆனால் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கியுள்ளாராம். இவரது முன்னாள் பார்ட்னர் பெயர் சம்மர் வார்டன். இவர் தற்போது விசாரணை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது ஆனி பூமிக்குத் திரும்பி விட்டார்.

விவாகரத்து
விசாரணைக்கு தற்போது ஆனி முழுமையாக ஒத்துழைப்பு தருவதாகவும், தான் தவறு செய்யவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் ரஸ்டி ஹார்டின் கூறியுள்ளார். 2014ம் ஆண்டுதான் ஆனிக்கும், அவரது பார்ட்னருக்கும் கல்யாணம் நடந்தது. புருஷன் பொண்டாட்டி இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்து வந்தனர். ஆனால் என்ன நடந்ததே இருவருக்கும் மனசு ஒத்துப் போகலை. எனவே 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டனர். இவர்கள் ஆனி என்ற மகனை தத்தெடுத்து இருந்தனர். அதனால் குடும்பச் செலவுகளுக்கு வோர்டன்தான் காசு தருகிறாராம்.

செலவு
ஆனி ஒரு ராணுவ வீராங்கனை ஆவார். பைலட்டும் கூட. போர் விமானங்களை ஓட்டியுள்ளார். ஈராக் மீது மட்டும் 800 முறைக்கு மேல் பறந்துள்ளாராம். இவரை விண்வெளி வீராங்கனையாக 2013ம் ஆண்டு நாசா தேர்வு செய்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் செலவழித்துள்ளார். மேலும் முதல் முறையாக விண்வெளியில் நடந்த பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

வீட்டு செலவு
ஏம்மா இப்படி செஞ்சீங்க ஆனி என்று கேட்டபோது, என் குடும்பச் செலவு, குழந்தை வளர்ப்புச் செலவு, வீட்டுக்கான செலவுகளை அவர்தான் பார்த்துக் கொள்கிறார். மாதச் செலவுக்கான பணம் வங்கியில் இருக்கான்னு செக் செய்யவே பார்த்தேன். வேறு காரணமல்ல என்று கூறி அதிர வைத்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications