மாறுவேடத்தில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த பெண்.. 4 கோழி மீது காதல்.. அமெரிக்காவில் என்னாச்சு தெரியுமா?
நியூயார்க்: ஒரு இளம்பெண்ணுக்கு பறவைகள், விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.. அதிலும் கோழிகள் மீது அளவில்லாத காதல் உள்ளது.. ஆனால், கோழிகள் மீது அவருக்கு இருந்த இந்த காதல்தான், அவரை தர்மசங்கடத்திற்கு இன்று ஆளாக்கி உள்ளது.. இந்த இளம்பெண்ணை பற்றிதான் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது. யாரிந்த பெண்? என்ன செய்தார்? தெரியுமா?
பறவை காதலர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. இவர்கள் கருணைமிகு இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.. பறவைகளின் சிறிய துன்பத்தையும் தன்னுடைய துன்பமாக உணரக்கூடியவர்கள்..

பறவைகள் காதலர்கள்
பறவைகளுக்கு உணவு கொடுப்பது, தண்ணீர் தருவது என அக்கறை நிறைந்தவர்கள்.. பறவையின் குரலையும் இசையாக ரசிப்பார்கள்.. , பறவைகளின் சத்தமே இவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.. பறவைகள் மீது பாசம் உள்ளவர்கள், அந்த பறவைகளை கூண்டில் அடைத்து வைக்க விரும்பாதவர்கள்.. பறவைகள் வானில் சுதந்திரமாக பறக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.
ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் கோழி மீது அளவுகடந்த காதலை பொழிந்துள்ளார்.. இந்த அபரிமிதமான காதல்தான், மிகப்பெரிய சிக்கலை அவருக்கு தந்துவிட்டது.
கோழி மீது காதல்
கலிபோர்னியாவை சேர்ந்த அந்த பெண் ஒரு கல்லூரி மாணவி ஆவார்.. 23 வயதான அந்த பெண்ணின் ஜோ ரோசன்பெர்க்.. இவரது அப்பா ஒரு கால்நடை மருத்துவர் ஆவார். இதனால்
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பூனைகள், நாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுடன் குழந்தையிலிருந்தே வளர்ந்தவர் இந்த பெண்.. அப்போதிருந்தே கால்நடைகள் மீது பிரியம் அதிகம்.
விலங்கு நல ஆர்வலராக பணியாற்றி வந்த ரோசன்பெர்க், கடந்த 2023 ஜூன் மாதத்தில், தன்னுடைய நண்பர்களுடன் சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகிலுள்ள பெட்டலுமா பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.. கோழிகளை பார்த்ததுமே ரோசன்பெர்க் தன்னிலை மறந்தார்.. எப்படியாவது அங்கிருந்த கோழிகளை தன்னுடன் எடுத்து செல்ல முடிவு செய்தார்.
கோழிப்பண்ணையில் மாறுவேடம்
இதற்காக பண்ணை ஊழியர் போல் வேடமிட்டு சென்றார்.. அங்கு லாரியில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து, வெறும் 4 கோழிகளை மட்டும் ஒரு பக்கெட்டில் போட்டு, மூடி மறைத்து வெளியே எடுத்து வந்துவிட்டார்.
பிறகு அந்த கோழிகளை நல்லபடியாக வளர்க்கவும் முடிவு செய்தார்.. இதற்காக 4 கோழிகளுக்கும் தனக்கு பிடித்தமான பெயரை வைத்தார்.. பிறகு 4 கோழிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் ரோசன்பெர்க்..
அப்போதுதான், அந்த 4 கோழிகளும், கடுமையான காயங்கள், சிராய்ப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனே மருத்துவ பரிசோதனையின் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து, கோழி பண்ணைகளில் விலங்குகளுக்கு கொடுமை நடப்பதாக தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்தார்.
4 கோழியால் வந்த சிக்கல்
இந்த பதிவானது, இணையவாசிகளின் கவனத்தையும் பெற்றது.. இதனால் பலருக்கும் கோழிகளின் நலனில் கவனம் திரும்பியது.. ஆனால், 4 கோழிகளையும் காணாமல் தேடிக் கொண்டிருநத் கோழி பண்ணை நிர்வாகமோ, இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்தது..
கோழியை திருடி சென்றது ரோசன்பெர்க் என்பதை அறிந்து, திருட்டு மற்றும் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டில் ரோசன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்தது.. இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை ரோசன்பெர்க் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.. கோழிகளின் நலனுக்காக ரோசன்பெர்க் செய்த காரியம், இன்று அவருக்கு எதிராக சட்டப் பிரச்சனையாக திரும்பியிருக்கிறது..!!
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications