சர்வதேச மார்க்கெட்டில்.. வரலாறு காணாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை! டிரம்ப்தான் காரணம்
நியூயார்க்: சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. இன்று மதியம் நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 2,971 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி அறிவிப்பு இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

AFP செய்தி ஊடகத்தின் தகவலின் படி ஒரு அவுன்ஸ் தங்கம் இந்திய மதிப்பில் ₹2,60,733க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இன்று மதியம் அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஷாம்பெயின், வைன் மற்றும் இதர மதுபான வகைகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வந்ததையடுத்து தங்கம் விலை சரசரவென உயர்ந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பணத்தை நம்பி போடும் துறையாக மதுபான துறை இருந்தது. சரக்கடிக்காமல் யாராவது இருப்பார்களா? எனவே சாராயத்திற்கு எப்போதும் டிமான்ட் அதிகம். வருவாயும் அதிகம். எனவே, முதலீட்டாளர்கள் விரும்பும் துறையாக இது இருக்கிறது. ஆனால், டிரம்ப்பின் அறிவிப்பால் முதலீட்டாளர்கள் ஜாகா வாங்கியிருக்கிறார்கள். முதலீடு போட தயங்குகிறார்கள். மட்டுமல்லாது பாதுகாப்பான முதலீடு தங்கம்தான் என்று நம்பியுள்ளனர்.
இதனால் பலரும் தங்கத்தை நோக்கி ஓடுகின்றனர். தேவை அதிகமாக அதன் மதிப்பும் உயரும் என்பது அடிப்படை விதி. அதுபோலவே தற்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் அறிவிப்பும் தங்கம் விலையுயர்வும்:
உதாரணத்திற்கு பிரான்சின் Moët & Chandon ரக ஷாம்பெயினை எடுத்துக்கொள்வோம். இந்த சரக்கின் 750 மி.லி பாட்டிலின் விலை பிரான்சில் ரூ.3,975. இதே அமெரிக்காவில் ரூ.4,694 மதிப்பில் விற்பனையாகிறது. ஆனால், டிரம்ப் வரியை போட்டால் அமெரிக்காவில் இந்த சரக்கின் விலை உயர்ந்துவிடும். விலை அதிகமானால் மற்ற ஊர் சரக்கை தேடி குடி'மகன்கள் நகர்ந்துவிடுவார்கள். இதனால் பிரான்சின் ஒவ்வொர பிராண்ட சரக்கின் வியாபாரமும் மந்தமாகிவிடும். பிரான்ஸ் மட்டுமல்லாது ஐரோப்பி நாடுகளின் மொத்த ஆல்கஹால் வியாபாரமும் நசநசத்துவிடும். எனவேதான் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருப்பதால், இந்திய சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications