ரூ.8 கோடி லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்.. பைபிளில் இருந்த பம்பர் டிக்கெட்! ஜாக்பாட்டால் துள்ளிய பெண்
நியூயார்க்: அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்பது உறுதியாக தெரியாது. ஆனால் திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும். அப்படித்தான் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்து, பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.
லாட்டரி டிக்கெட் வாங்குபவர்களுக்கு எல்லாருக்குமே அதிர்ஷ்டம் அடித்துவிடுவதில்லை.. அதேபோல, சில எதிர்பாராத ஆச்சரியங்களும் நடந்து விடுவதுண்டு..

இங்கிலாந்தின் டார்செட் (Dorset) என்ற இடத்தை சேர்ந்த 40 வயது ஏமி என்பவர், லாட்டரியில் மிகவும் பிரியம் உடையவர். வழக்கம்போல் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். அதில் பரிசு விழுந்திருப்பதாக சொல்லவும், எப்படியும் 10,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துவிடும் என்று நினைத்து சென்றுள்ளார். ஆனால், பரிசுத்தொகையை 250,000 பவுண்டுகள் பரிசு என்றதுமே, ஏமிக்கு தலைகால் புரியவில்லை.
பிறகு திடீரென, மேலும் 2 பேருக்கு 250,000 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏமி குழம்பி போனார்.. பிறகுதான் தெரிந்தது, பிரையன், கிறிஸ் என்ற வேறு நபர்களுக்கும், அதே பரிசு தொகை கிடைத்துள்ளது.
தம்பதி: அதாவது, ஒரே தொகை லாட்டாரியில் 3 பேருக்கும் கிடைத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. ஏமியுடன் பரிசு பெறும் மற்ற 2 பேருமே, கணவன், மனைவி ஆவார்.. அதிலும், அந்த தம்பதி இருவருமே, ஏமி வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்களாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமல் லாட்டரி வாங்கியிருக்கிறார்கள். பிறகுதான் 2 பேருக்குமே அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த தம்பதியினர், ஏமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களாம். ஒரே நாளில், ஒரே தெருவில் 3 பேருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம், லண்டனில் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படித்தான் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒருவர், 18 வருடங்களுக்கு முன்பு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.. அதில், 300 டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது. பிறகு, 18 வருடம் கழித்து, மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.. அந்த எண்ணை சரிபார்த்தபோது, அவருக்கு முதல் பரிசு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 18 வருடங்களுக்கு முன்பு பரிசு விழுந்த அதே நம்பர்தான், இப்போது வாங்கிய லாட்டரி சீட்டிலும் இருந்திருக்கிறது.
ஆச்சரியம்: இதோ இப்போது மீண்டும் அமெரிக்காவில் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. விர்ஜினீயா பகுதியை சேர்ந்த ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவாராம்.. இப்படித்தான், புத்தாண்டையொட்டி லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். அந்த டிக்கெட்டை வாங்கி வந்து, வீட்டிலுள்ள பைபிளில் மறைத்து வைத்துவிட்டார்.. பிறகு வழக்கம் போல் தன்னுடைய வேலைகளை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது தான் அவருக்கு தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் பற்றியே ஞாபகம் வந்துள்ளது. உடனே ஓடிச்சென்று, பைபிளில் மறைத்து வைத்த தன்னுடைய லாட்டரி டிக்கெட்டை எடுத்து பார்த்துள்ளார்.. அந்த டிக்கெட்டுக்குதான் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.. அதாவது 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் உறைந்துவிட்டார்.
வாழ்த்துக்கள்: பைபிளில் வைத்த டிக்கெட்டை மறந்துபோன நிலையில், யதேச்சையாக அந்த டிக்கெட்டை எடுக்க பார்க்கலாம் என்று நினைத்தாராம். ஆனால், முதல் பரிசு என்றதுமே, படுகுஷியில் இருக்கிறாராம் ஜாக்குலின்.. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், ஜாக்குலினுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications