டாய்லெட்டில் கிடந்த பேப்பர்.. எஃப்பிஐ ரெய்டுக்கு முன் முக்கிய ஆவணங்களை அழித்த டிரம்ப்? அட கொடுமையே!
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில்.. டிரம்ப் முக்கியமான சில ரகசிய ஆவணங்களை அழித்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புளோரிடா வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் பதவிக்காலம் முடிந்த பின் பல்வேறு ரகசிய ஆவணங்களை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
பெரும்பாலான ஆவணங்களை டிரம்ப் தன்னுடைய சொந்த வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். மொத்தம் 15க்கும் மேற்பட்ட பாக்ஸ்களில் இவர் அதிபர் அலுவலக ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

என்ன ஆவணங்கள்
அதில் சில ஆவணங்கள் உளவு தகவல்கள், வெளியே வர கூடாத ரகசிய தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து தனது பண்ணை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். புளோரிடாவில் உள்ள Mar-a-Lago வீட்டிற்கு டிரம்ப் இந்த ஆவணங்களை எடுத்து சென்று இருக்கிறார். இதை அரசு ஆவண காப்பகம் பல முறை கேட்டும் டிரம்ப் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதை மீட்பதற்கான ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டு காரணமாக டிரம்ப் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சந்தேகம்
இந்த ரெய்டு நடந்து வரும் நிலையில்.. டிரம்ப் முக்கியமான சில ரகசிய ஆவணங்களை அழித்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதிபர் பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த புகாரை வைத்து உள்ளனர். டிரம்ப் வீட்டில் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் டிரம்ப் சில ரகசிய ஆவணங்கள், பேப்பர்களை அழித்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. அவர் இதற்கு முன்பே ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டு பின்னர் அதை அழிக்கும் வழக்கம் கொண்டவர்.

ஆவணங்கள் அழிப்பு
ஆவணங்களை எடுத்து சென்று பின்னர் மாட்டிவிட கூடாது என்பதால் அதை அழிக்கும் வழக்கம் கொண்டவர் டிரம்ப். அப்படித்தான் இந்த முறையும் டிரம்ப் செய்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவரின் வீட்டில் தடயவியல் சோதனை செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். டிரம்ப் அதிபராக இருந்த போதே அவர் முக்கியமான ஆவணங்களை டாய்லெட்டில் கிழித்து போட்டு பிளஷ் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளை மாளிகையில் இப்படி அவர் ஆவணங்களை பிளஷ் செய்து இருக்கிறார்.

டாய்லெட்
அதேபோல் வெளிநாட்டு பயணத்திலும் இவர் முக்கியமான ஆவணங்களை பிளஷ் செய்துள்ளார். டாய்லெட்டில் பேப்பர்கள் கிடக்கும் இந்த பழைய போட்டோக்கள் தற்போது எஃப்பிஐ ரெய்டு காரணமாக மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல்தான் இந்த முறையும் முக்கியமான ஆவணங்கள் புளோரிடா வீட்டில் அழிக்கப்பட்டு இருக்கும் என்று ஜனநாயக கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதனால் அங்கே தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications