பரபரத்த டாப் அதிகாரிகள்.. அமெரிக்காவில் பென்டகனுக்குள் நுழைந்த "கோழி".. அடுத்து நடந்த செம ட்விஸ்ட்!
நியூயார்க்: அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உள்ளே கோழி ஒன்று நுழைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகம்தான் பென்டகன். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு கொண்ட பகுதிகளில் ஒன்றாக பென்டகன் உள்ளது.
24 மணி நேரமும் இங்கு மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் பல அடுக்கு பாதுகாப்புகளை கடக்க வேண்டும்.

பென்டகன்
இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட இந்த பென்டகன் கட்டிடம் விர்ஜினியாவில் அமைந்துள்ளது. இவ்வளவு பாதுகாப்பான கட்டிடம் என்றாலும் 9/11 தாக்குதலில் இந்த கட்டிடமும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 77 விமானம் இந்த கட்டிடத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் பென்டகனில் இருந்த 125 பேர் பலியானார்கள். அதேபோல் அந்த விமானத்தில் இருந்த 59 பேர் பலியானார்கள்.

தாக்குதல்
இதில் இருந்தே பென்டகனுக்கு மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாதுகாப்பையும் மீறி பென்டகனுக்குள் ஒருவர் நுழைந்து இருக்கிறார்.. அந்த ஒருவர்.. சிவப்பு நிற நாட்டு கோழி. ஆம் உள்ளூர் கோழி ஒன்று அங்கு பென்டகனுக்குள் நுழைந்துள்ளது. உள்ளே இருக்கும் செக்யுரிட்டி பாயிண்ட் வரை அந்த கோழி சென்றுள்ளது.

கோழி
அதாவது முதல் கட்டத்தில் இருந்த சில செக்யூரிட்டி பகுதிகளை தாண்டி அந்த கோழி பாதுகாப்பாக உள்ளே எப்படியோ சென்றுள்ளது. அந்த கோழி உள்ளே வந்த பின்புதான் உண்மையான ட்விஸ்டே நடந்தது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதிக்கு உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்தனர். பலர் அந்த இடத்தில் குவிந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளே வந்தனர். சில உயர் அதிகாரிகளும் வந்தனர். அந்த கோழியை தீவிரமாக ஆராய்ந்தனர். இப்போதெல்லாம் பறவைகள், விலங்குகளை வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

கோழி பென்டகன்
அதாவது புறாவில் குண்டை கட்டி பறக்க விடுவது. பறவைகளை பயோ ஆயுதமாக வைரஸ் பரப்ப பயன்படுத்துவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால் அந்த கோழியையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த கோழியை சில மணி நேரங்கள் கஸ்டடியில் வைத்து அமெரிக்க பென்டகன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் உடலில் ஆயுதங்கள், வைரஸ்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.

ஆபத்து இல்லை
இதையடுத்து அந்த கோழி ஆபத்து இல்லாத கோழி என்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து விலங்குகள் நல ஆணையத்திடம் அந்த கோழி ஒப்படைக்கப்பட்டது. அந்த கோழி எப்படி உள்ளே வந்தது என்பதுதான் இன்னும் புதிராக உள்ளது. கோழி பென்டகன் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியாக எந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பென்டகன் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications