Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஓரினச்சேர்க்கை".. நைட் கிளப்பில் வெடித்த "வெறுப்புணர்வு".. 5 பேர் சுட்டுக்கொலை.. 25 பேர் சீரியஸ்

துப்பாக்கியால் சுட்டதில், தன்பாலின ஈர்ப்பு விடுதியில் 5 பேர் பலியானார்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கண் இமைக்கும் நேரத்தில், துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்.. 25 பேர் சீரியஸாக இருக்கிறார்கள்.. இந்த சம்பவம் அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான விடுதியில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன..

அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்..

 120.48

120.48

அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி இருக்கிறது.. ஆனால், எல்லாரிடமும் துப்பாக்கி இருப்பது தான் பாதுகாப்பு என்று அம்மக்கள் நினைக்கிறார்களாம்.. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்போதும் ஒரு பகீர் நடந்துள்ளது.. கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் என்ற இடம் உள்ளது.. இங்கு தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக ஒரு நைட் கிளப் இயங்கி வருகிறது.. இந்த இடத்தில்தான் சம்பவத்தன்று இரவு துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

 காஸ்ட்ரோ

காஸ்ட்ரோ

மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. 25 பேர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால், உயிரிழப்புகள் மேலும் கூடும் என்றும் அஞ்சப்பட்டு வருகிறது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததுமே, போலீசார் அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.. துப்பாக்கிச்சூடு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய கொலராடோ ஸ்பிரிங்ஸ் போலீஸ் லெப்டினன்ட் பமீலா காஸ்ட்ரோ இதுகுறித்து விரிவாக பேட்டி தந்துள்ளார்.

 நைட் கிளப்பில்

நைட் கிளப்பில்

அதில், "கிளப் கியூவில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, ஆண்டர்சன் லீ ஆல்ட்ரிச் என்ற 22 வயது இளைஞர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.. அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.. காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நள்ளிரவுக்கு முன்பே போலீசாருக்கு, முதல் தகவல் கிடைத்துவிட்டது... சம்பவ இடத்திற்கு சென்ற பிறகு, கிளப்பில் இருந்த ஒருவர் மீது அதிகாரிகளுக்கு வந்ததால், அவரை கைது செய்துள்ளோம்.. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை.. துப்பாக்கிச் சூட்டில் என்ன வகையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்பதையும் அவர் சொல்லவில்லை.. விசாரித்து வருகிறோம்" என்றார்.

 உமிழும் வெறுப்பு

உமிழும் வெறுப்பு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நைட்கிளப் சார்பாக ஃபேஸ்புக்கில் பதிவு போடப்பட்டுள்ளது.. அந்த பதிவில், "எங்கள் சமூகத்தின் மீதான இந்த முட்டாள்தனமான தாக்குதலால் கிளப் கியூ பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது.. எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.. எங்கள் சமூகத்தின் மீதான அர்த்தமற்ற தாக்குதலால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறோம்.. துப்பாக்கியை கொண்டு தாக்கியவரை அடக்கி, இந்த வெறுப்பு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்த வீரமிக்க வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

 நைட் கிளப்

நைட் கிளப்

ஒருபக்கம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெருகிவந்தாலும், மறுபக்கம் தன்பாலின விவகாரங்கள் தொடர்பாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இப்படித்தான், கடந்த 2016-ல் புளோரிடாவின் ஆர்லாண்டோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான, நைட் கிளப்பில் இதேபோல துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.. 49 பேரையும் ஒருவர் சுட்டுக் கொன்றார்.. பிறகு, போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்..

 ஓரினச்சேர்க்கையாளர்

ஓரினச்சேர்க்கையாளர்

சமீபத்தில்கூட, வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் இப்படித்தான், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். தற்போது நடந்துள்ள இந்த துப்பாக்கிச்சூடு மிகப்பெரிய அதிர்வலையை அந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. வெறுப்புணர்வு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, "வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது" என அமெரிக்க அதிபர் பைடன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஆளுநரான கொலொராடோ ஆளுநர் ஜாரெட் போலிஸ், இந்த துப்பாக்கிச் சூடு "அறிவற்ற தீய செயல்" என்று கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+