எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. எனக்கு எண்டே கிடையாது! வெள்ளை மாளிகையில் கெத்தாக டிரம்ப்!
நியூயார்க்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாலியல் வழக்கில் தண்டனை, வெள்ளை மாளிகையில் கலவரம் என அமெரிக்காவின் மிக மோசமான நபராக சித்தரிக்கப்பட்ட அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் கால் பதிக்க இருக்கிறார். அவர் சாதித்தது எப்படி?
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போது போட்டியில் இருக்கும் முன்னாள் அதிபர் ஆன டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஆன கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

அமெரிக்க அதிபர் தேர்தல் எலெக்ட்ரோல் முறைப்படி நடைபெற்று வருகிறது. 50 மாகாணங்களில் 538 தேர்வு குழு உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்கள் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும்.
ஆரம்பத்தில் ட்ரம்ப் கை ஓங்கினாலும், நேரம் செல்ல செல்ல கடுமையான போட்டி இருந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் ட்ரம்ப் முன்னிலை பெற்ற நிலையில், நேற்று 50 மாகாணங்களிலும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ப்ளோரிடா, டெக்ஸாஸ், நார்த் கரோலினா, இண்டியானா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
பின்தங்கிய நிலையில் இருந்த கமலா ஹாரிஸ் தற்போது திடீரென முன்னேறிய நிலையில், தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து அலபாமா, ஃப்ளோரிடா, மேற்கு வெர்ஜினியா உள்ளிட்ட வாகனங்களிலும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். தொடர்ந்து 266 மேற்பட்ட எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகளை அவர் பெற்ற நிலையில், அதிபரை தீர்மானிக்கும் ஏழு மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா ,பென்சில்வேனியா ஆகிய மூன்று மாகாணங்களில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அமெரிக்காவில் அதிபர் ஆகுவது உறுதியாகி உள்ளது.
கமலா ஹாரிஸ் கலிபோர்னியா, ஓரேகான், வாஷிங்டன், நியூயார்க், வில்லியம்ஸ், ஒரிகன்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகிய மாகாணங்களை வசப்படுத்தினாலும், 230 தேர்வாளர் குழு வாக்குகளை பெறுவதே சிரமம். இதை அடுத்து அமெரிக்காவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பொற்காலம் என தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முறை தோல்வி அடைந்து மீண்டும் அதிபராகி வெள்ளை மாளிகைக்குச் செல்லும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ட்ரம்ப். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்வு முடிவுகளை அவர் ஏற்க மறுத்தார். தொடர்ந்து வாஷிங்டனில் அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர்.
டொனால்ட் ட்ரம்ப், பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் 150 ஆண்டு கால அமெரிக்காவின் பழக்கத்தை உடைத்தவர். வெள்ளை மாளிகையை விட்டு அவர் வெளியேறும் போது மிகவும் கோபமாக இருந்ததாக அப்போது கூறப்பட்டது. அதற்குப் பிறகு பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை, வெள்ளை மாளிகை வன்முறை என டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக மோசமான நபராக கண்டறியப்பட்டார்.
அதற்குப் பிறகு தனிமையில் இருந்த அவர் ஓராண்டுக்குப் பிறகு அதாவது 2021 பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் முன் தோன்றினார். அதற்குப் பிறகு சிறிது சிறிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தை கையில் எடுத்தார். அப்போது ஜோ பைடன் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், ட்ரம்புக்கு ஆதரவு கிடைக்க தொடங்கியது.
ஆரம்பத்தில் தற்போதைய அதிபர் தேர்தலில் டிரம்ப் மீது எதிர்மறை விமர்சனங்களே இருந்தது. அவரது சொந்த கட்சியினர் கூட அவருக்கு எதிராகவே செயல்பட்டனர் என்றே கூறலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி பிரச்சாரம், மக்களை நேரடியாக சந்தித்தது, விவாதங்களில் அசத்தலான வாதம் என டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார். இதனால் எந்த வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேற்றப்பட்டாரோ அதே வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிபராக கால் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications