ஈரானை தாக்கும் அமெரிக்கா? சுத்துப்போட்ட போர் விமானங்கள் - போர்க்கப்பல்கள்.. பதற்றம்
நியூயார்க்: இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சனை உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதை டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக கூறிவிட்டார். இதற்கிடையே தான் ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வரும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனை தற்போது போராக வெடித்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனையாக மாறும். இதனால் அதனை இஸ்ரேல் எதிர்த்தது.

அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் பகை உள்ளது. இதனால் அமெரிக்காவும் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய் யவேண்டும் என்று டிரம்ப் கூறினார். இருநாடுகளும் தொடர்ந்து பேசியும் கூட ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் அமெரிக்காவும், ஈரான் மீது கடும் கோபத்தில் உள்ளது. இப்போது ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் என்ட்ரி கொடுத்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலும், அமெரிக்காவும் நண்பர்கள். இதனால் ஈரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது படை வலிமையை அதிகரித்து வருகிறது. மேலும் ஈரானை அமெரிக்கா சுத்துப்போட தொடங்கி உள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது
ஏனென்றால் அமெரிக்கா மத்திய கிழக்கில் போர் விமானங்கள், போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்கள், போர்க்கப்பல்கள் குவித்து வருகிறது. அதேபோல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர்,‛‛எங்கள் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். அதேபோல் டொனால்ட் டிரம்பும், ‛‛ஈரானை சுற்றியவான்வெளியை முழுமையாக நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்'' என்றார்.
அதன்படி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க போர் விமானங்கள் ரோந்து பணியை தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அமெரிக்கா தனது எப்16 எஸ் ரக போர் விமானத்தை சவுதி அரேபியாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு அனுப்பி உள்ளது. அதேபோல் டியாகோ கார்சியாவில் பி-52 பாம்பர்ஸ் ரக போர் விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆரோரா இன்டெல் என்ற அமைப்பு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த அப்டேட்டுகளை வழங்கி வரும் அமைப்பாகும். ஆரோரா இன்டெல் வழங்கிய உள்ள தகவலின்படி ஐரோப்பாவின் இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்டவற்றில் கூடுதலாக போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக குவித்துள்ளது.
அதேபோல் அமெரிக்க போர்க்கப்பல்கள் இஸ்ரேலை நோக்கி ஈரான் அனுப்பும் ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன. மேலும் USS The Sullivans மற்றும் USS Arleigh Burke போன்ற நாசகார போர்க்கப்பல்கள் ஈரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. USS Carl Vinson போர்க்கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. USS Nimitz எப்போது வேண்டுமானாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை விரையும் வகையில் கடலில் வலம் வருகிறது. அதேபோல் USS Gerald R. Ford அடுத்த வாரத்துக்குள் ஐரோப்பியாவின் கட்டளை மைய தளத்தில் நிலைநிறுத்தபப்ட உள்ளது.
மேலும் சாதாரணமாகவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் வெவ்வேறு தளங்களில் பணியில் இருப்பார்கள். கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த மோதல் காரணமாக இந்த வீரர்களின் எண்ணிக்கை 43 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு பதற்றம் தணிந்ததால் வீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய ராணுவ தளங்களில் வீரர்கள், அதிகாரிகளை தவிர அவர்களின் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க முழுவீச்சில் தயாராகிவிட்டது.
இருப்பினும் டியாகோ கார்சியாவில் இப்போது வரை பி 2 ஸ்டெல்த் பாம்பர்ஸ் எனும் போர் விமானத்தை அமெரிக்கா கொண்டு செல்லவில்லை. இந்த போர் விமானம் என்பது ரொம்ப ஆபத்தானது. மொத்தம் 30 ஆயிரம் புவுண்ட் எடை கொண்ட வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது. அதேபோல் இந்த பி 2 ஸ்டெல்த் பாம்பர்ஸ் ரக போர் விமானத்தால் சுரங்கம், பாதாள அறை உள்ளிட்டவற்றை கூட அழிக்க முடியும். அதேபோல் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளம் என்பது மலைகளுக்கு நடுவே பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இந்த தளம் முக்கியமான ஒன்று.
இதனை இஸ்ரேலால் தாக்கி அழிக்க முடியாது. இதனை அழிக்க வேண்டும் என்றால் GBU-57 பயன்படுத்தப்பட வேண்டும். 'பங்கர் பஸ்டர்கள்' (Bunker Busters) என அழைக்கப்படும் இது மலைக்கு நடுவே இருக்கும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்கும் வல்லமை கொண்டது. இதனை GBU-57 Massive Ordnance Penetrator (MOP) என்று அழைப்பார்கள். இந்த குண்டை பயன்படுத்தினால் நிலத்திற்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகள், பாதாள அறைகளை எளிதாக அழிக்க முடியும். GBU-57 குண்டுகள் ஜிபிஎஸ் உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும். சுமார் 2 டன் TNT வெடிபொருள் எந்த அளவுக்கு பாதிப்பை வெளியிடுமோ அந்த அளவுக்கு இந்த குண்டு வீரியமானது. ஆனால் தற்போது அந்த விமானத்தை அமெரிக்கா கையில் எடுக்கவில்லை என்பது ஈரானுக்கு சற்று ஆறுதலாக விஷயமாகும்.












Click it and Unblock the Notifications