அலறும் அமெரிக்க மக்கள்.. மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவிப்பது ஏன்? சோலியை முடித்த டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பால் அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் ஆடைகள், காலணிகள், மின்னணு சாதனங்கள் என பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க மக்கள் அலறல்
இந்த கூடுதல் வரியை பொதுவாக அந்த நாடுகள் செலுத்தாது. மாறாக அமெரிக்க குடிமக்கள்தான் செலுத்த வேண்டும். கனடாவில் அமெரிக்கா அரிசி வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கான வரி இப்போது 25% உயர்ந்துவிட்டது. இதை இறக்குமதி செய்து விற்பது ஒரு அமெரிக்க டீலராகவே இருப்பார். அவர் அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரியை கட்ட வேண்டும். இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட அவர் விற்பனை விலையை அதிகரிப்பார். இதனால் பொருட்களின் விலை உயரும். மெக்சிகோ மற்றும் கனடா இதனால் எப்படி நேரடியாக பாதிக்கப்படும் என்ற கேள்வி எழலாம். நேரடியாக மெக்சிகோ மற்றும் கனடா இதனால் பாதிக்காது.
கூடுதல் வரியால் மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களை வாங்க டீலர்கள் யோசிப்பார்கள். அதனால் அதன் மவுசு குறையும். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதை இறக்குமதி செய்யும் அமெரிக்கர்கள்தான். அவர்கள்தான் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்கும். அதிலும் சீனாவின் சில பொருட்கள் இல்லாமல் அமெரிக்காவில் வியாபாரமே நடக்காது. அதை எப்படி இருந்தாலும் அமெரிக்க டீலர்ஸ் அதிக வரி தந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும். இதைத்தான் சொந்த செலவில்.. சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்கர்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
கதறும் அமெரிக்கா
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு ஏற்கனவே கனடா, மெக்சிகோ பதிலடி தந்துவிட்டது. கனடா, மெக்சிகோ இரண்டும் அமெரிக்காவின் பொருட்கள் மீது 25% வரியை விதித்து விட்டது. தற்போது சீனா பல அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்து உள்ளது. அதேபோல் விதிமீறல்கள் தொடர்பாக கூகுள் மீது விசாரணையை அறிவித்து உள்ளது
அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான இலங்கை மீதி இதை விட டபுள் மடங்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதோடு தைவான் மீது 32% வரிகளை விதித்து உள்ளார். இதில் தைவானை இதுவரை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரித்தது இல்லை. இப்போது இந்த வரி மூலம் மறைமுகமாக தனி நாடாக அங்கீகரித்து உள்ளது.
• சிலி 10%
• இந்தியா 26%
• இஸ்ரேல் 17%
• பிரேசில் 10%
• சீனா 34%
• ஜப்பான் 24%
• துருக்கி 10%
• தைவான் 32%
• வியட்நாம் 46%
• பாகிஸ்தான் 29%
• தாய்லாந்து 36%
• ஆஸ்திரேலியா 10%
• மலேசியா 24%
• கொலம்பியா 10%
• இலங்கை 44%
• சிங்கப்பூர் 10%
• இந்தோனேசியா 32%
• கம்போடியா 49%
• பிலிப்பைன்ஸ் 17%
• சுவிட்சர்லாந்து 31%
• பங்களாதேஷ் 37%
• தென் கொரியா 25%
• தென்னாப்பிரிக்கா 30%
• யுனைடெட் கிங்டம் 10%
• ஐரோப்பிய ஒன்றியம் 20%
ஏற்கனவே இந்திய மார்க்கெட் சரிவு
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications