டிரம்ப் வைத்துக்கொண்ட சூனியம்.. வர்த்தக போரால் இந்தியாவிற்குத்தான் லாபம்.. இதுதான் செம சான்ஸ்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவிற்குத்தான் சாதகம் ஏற்படும்.. அமெரிக்காவிற்குத்தான் இந்த முடிவு காரணமாக பெரிய சிக்கல் என்று கூறப்படுகிறது. முன்னாள் ஆர்பிஐ கவர்னர் வைரல் ஆச்சார்யா இது தொடர்பாக முக்கியமாக சில தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதன் சாராம்சம் இங்கே தரப்பட்டு உள்ளது.
1. அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தால் அங்கே இந்திய பொருட்கள் இறக்குமதி குறையும். இதனால் இந்திய பொருட்கள் இங்கே தேங்கும். ஆனால் இதன் மூலம் மற்ற நாடுகளுக்கு இதே பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.

2. இந்திய பொருட்களை உலகம் முழுக்க இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.
3. சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா வர்த்தக போரை தொடங்கிவிட்டது. இதற்கு முன்பே சீனா இதே பார்முலாவை கடைப்பிடித்தது. இந்த பார்முலா படியே சீன பொருட்கள் உலகம் முழுக்க சென்றது.
4. அமெரிக்காவின் வர்த்தக போரை கருத்தில் கொண்டு.. இந்திய வரியை குறைத்தால் பல பொருட்களின் விலை இங்கே குறையும்.
5. அமெரிக்க பொருட்கள் விலை கணிசமாக இந்தியாவில் குறையும். இதனால் இந்தியாவிற்குத்தான் லாபம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக பரஸ்பர "பதிலடி" வரி.. அதாவது reciprocal வரியை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்து உள்ளார். ஆனால் இந்த வரி விதிப்பால் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்றால் அமெரிக்கா மறைமுகமாக பாதிக்கப்படும்.
அதாவது இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாமல் கஷ்டப்படும். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவால் அமெரிக்காவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது. அமெரிக்கா மீது 25% வரிகளை கனடா விதித்து உள்ளது.
இந்தியா மீது வரி
இது போக Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சிக்கல்
கனடாவில் அமெரிக்கா அரிசி வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கான வரி இப்போது 25% உயர்ந்துவிட்டது.
இதை இறக்குமதி செய்து விற்பது ஒரு அமெரிக்க டீலராகவே இருப்பார். அவர் அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரியை கட்ட வேண்டும்.
இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட அவர் விற்பனை விலையை அதிகரிப்பார். இதனால் பொருட்களின் விலை உயரும். மெக்சிகோ மற்றும் கனடா இதனால் எப்படி நேரடியாக பாதிக்கப்படும் என்ற கேள்வி எழலாம். நேரடியாக மெக்சிகோ மற்றும் கனடா இதனால் பாதிக்காது.
கூடுதல் வரியால் மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களை வாங்க டீலர்கள் யோசிப்பார்கள். அதனால் அதன் மவுசு குறையும். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதை இறக்குமதி செய்யும் அமெரிக்கர்கள்தான். அவர்கள்தான் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்கும். அதிலும் சீனாவின் சில பொருட்கள் இல்லாமல் அமெரிக்காவில் வியாபாரமே நடக்காது. அதை எப்படி இருந்தாலும் அமெரிக்க டீலர்ஸ் அதிக வரி தந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும். இதைத்தான் சொந்த செலவில்.. சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்கர்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications