நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனித டிஎன்ஏ விவரத்தோடு.. பூமியிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட திடீர் சிக்னல்.. ஏன்? பெரிய பிளான்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமியில் இருந்து மனிதர்களின் விவரங்கள் மற்றும் சூரிய குடும்பத்தின் விவரங்கள் அடங்கிய சிக்னல் ஒன்று வானத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. மனிதர்களின் டிஎன்ஏ விவரம் அடங்கிய இந்த சிக்னல் ஏன் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.. என்ன காரணம் என்று பார்க்கலாம்!

Recommended Video

    பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மனிதனின் விவரங்கள்.. ஏன் தெரியுமா?

    மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

    போதை மருந்து கொடுத்து 3 நாள்! இருட்டறையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! ஆளும்கட்சி பிரமுகர் மகன் கைதுபோதை மருந்து கொடுத்து 3 நாள்! இருட்டறையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! ஆளும்கட்சி பிரமுகர் மகன் கைது

    அந்த வகையில்தான் கடந்த 1974ம் ஆண்டு பூமியில் இருந்து விண்வெளிக்கு ரேடியோ மெசேஜ் அனுப்பப்பட்டது. ரேடியோ அலைகள் உலகம் முழுக்க இருக்கிறது என்பதாலும், இதை எளிதாக கிரகிக்க முடியும் அதில் மெசேஜ் அனுப்பப்பட்டது.

    விண்வெளிக்கு சிக்னல்

    விண்வெளிக்கு சிக்னல்

    போர்டோ ரிக்கோவில் இருந்து இந்த ரேடியோ சிக்னல் சக்தி வாய்ந்த Arecibo telescope மூலம் அனுப்பப்பட்டது. அதில் மனிதர்களின் டிஎன்ஏ விவரங்கள், கெமிக்கல் விவரங்கள், பூமி எப்படிப்பட்டது, அதில் என்ன வாயுக்கள் உள்ளன என்று அடிப்படை விவரங்களோடு தகவல் அனுப்பப்பட்டது. வேற்று உலகில் உயிரினங்கள் இருந்து, அது நம்மை புரிந்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்து இருந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டது.

     மீண்டும் ரேடியோ சிக்னல்

    மீண்டும் ரேடியோ சிக்னல்

    சிங்கிள் பசங்க பேஸ்புக்கில் பெண்ணுக்கு அனுப்பிய cringe மெசேஜ் போல இதற்கு கடந்த 50 ஆண்டுகள் ஆகியும் எந்த ரிப்ளேவும் வரவில்லை.எந்த ஏலியனும் சாப்டியா என்று இதுவரை மனிதர்களை பதிலுக்கு மெசேஜ் அனுப்பி கேட்கவில்லை. இந்த நிலையில்தான் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் விண்ணுக்கு இதேபோல் மெசேஜ் சிக்னலை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    யார் அனுப்புகிறார்

    யார் அனுப்புகிறார்

    அதன்படி Jet Propulsion Laboratoryயை சேர்ந்த ஜொனாதன் ஜியான் என்ற ஆராய்ச்சியாளர் இந்த முறையை மேற்கொள்ள இருக்கிறார். சீனாவின் Aperture Spherical radio Telescope என்ற மிகப்பெரிய 500 மீட்டர் தொலைநிக்கோ உதவியுடன் பால்வெளியை நோக்கி இந்த சிக்னலை அனுப்பி உள்ளனர். பால்வெளியில் உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதப்படும் பகுதியை நோக்கி இந்த மெசேஜ் அனுப்பப்பட உள்ளது.

    எங்கே அனுப்புகிறார்

    எங்கே அனுப்புகிறார்

    விண்வெளியை நோக்கி அனுப்பப்படும் இந்த மெசேஜ் அப்படியே பால்வெளியில் சென்று கொண்டு இருக்கும். வெளி உலகில் யாராவது இருந்து, அவர்கள் முன்னேற்றம் அடைந்து இருந்து, அவர்களால் சிக்னல்களை கிரகிக்க முடிந்தால் அவர்கள் இதை கண்டுபிடித்து பதில் அளிப்பார்கள். ஆனால் அதெல்லாம் இப்போது வரை சந்தேகம்தான். இருந்தாலும் இந்த ரேடியோ சிக்னலில் மனிதர்களின் டிஎன்ஏ அமைப்பு, பூமி எங்கே இருக்கிறது என்ற விவரம், சூரிய குடும்ப விவரம் என பல தகவல்கள் அடங்கி உள்ளன.

    என்ன நடக்கும்?

    என்ன நடக்கும்?

    இந்த அண்டத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா.. அல்லது வேறு எங்காவது யாராவது வாசித்துக்கொண்டு.. உங்களை போலவே இணையத்தில் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் வகையில் இந்த சிக்னல் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் வரும் பட்சத்தில் அது பெரிய திருப்பமாக இருக்கும். ஆனால் ஏலியன்கள் இருக்கிறதா.. அப்படியே இருந்தால் அவை இந்த சிக்னல்களை பெறுமா.. அப்படியே பெற்றாலும் அதை இவர் புரிந்து கொள்ளுமா.. புரிந்து கொண்டாலும் மீண்டும் சரியாக நமக்கு புரியும் வகையில் அவை பதில் அனுப்புமா என்பதெல்லாம் சந்தேகம்தான்!

    English summary
    Human DNA details and Earth details sent as a radio signal to space to find aliens. பூமியில் இருந்து மனிதர்களின் விவரங்கள் மற்றும் சூரிய குடும்பத்தின் விவரங்கள் அடங்கிய சிக்னல் ஒன்று வானத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X