நான் நினைச்ச மாதிரி இல்லை.. தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப்.. இப்படி சொல்லிட்டாரே.. இதுதான் புடின்!
நியூயார்க்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். நான் உக்ரைன் போரை எளிதாக நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை என்று டிரம்ப் கூறி உள்ளார்.
இந்த கருத்தை அவர் இங்கிலாந்துப் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் இணைந்து அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியதன் மூலம் புடின் தனது உண்மையான முகத்தை காட்டிவிட்டதாக ஸ்டார்மரும் புடினை விமர்சித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர் டிரம்ப்
செக்கர்ஸில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யா-உக்ரைன் போரைத் தீர்ப்பது மிகவும் எளிதானது என்று முதலில் தான் நினைத்ததாகவும், ஆனால் அது அப்படியில்லை என்றும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக, அலாஸ்காவில் புடின் மற்றும் டிரம்ப் இடையே ஒரு உச்சிமாநாடு நடைபெற்றது. அப்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி ரஷ்ய அதிபரிடம் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனாலும், அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
தோல்வி அடைந்த உக்ரைன் அதிபர்
டிரம்ப் தனது உரையில், "ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நான் நினைத்தேன், ஆனால் புடின் என்னை ஏமாற்றிவிட்டார். இது எளிதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இஸ்ரேல் மற்றும் காசாவிற்கான தீர்வில் நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம், பல மோதல்களைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இஸ்ரேல்-காசா விவகாரம் முடிவடையும், அதேபோல் ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரமும் முடிவடையும். ஆனால் போரில் என்ன நடக்கும் என்பதை எதையும் கணிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
மேலும், "ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய வீரர்களை விட அதிக விகிதத்தில் கொல்லப்படுகிறார்கள். ஆனால், ரஷ்யா போரை நிறுத்த விரும்பவில்லை. அவர் என்னை ஏமாற்றிவிட்டார்" என்றும் டிரம்ப் வருத்தத்துடன் தெரிவித்தார்.
டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என்று உறுதியளித்திருந்தார். 2022 இல் புடின் போரைத் தொடங்கினார், ஏனெனில் அவர் அமெரிக்கத் தலைமையை மதிக்கவில்லை நான் அதிபராக இருந்திருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது, நான் அதிபராக இருந்த போது நான்கு ஆண்டுகளாக இது நடக்கவில்லை. பெரும்பாலான மக்கள் இதை ஒப்புக்கொள்கிறார்கள். நான் இருந்தால் போரை நிறுத்தி இருப்பேன்" என்று அவர் வலியுறுத்தினார்.
ரஷ்ய போரால் டிரம்ப் - இந்தியா மோதல்
இந்த போர் காரணமாக ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க உலக நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதாவது ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிய மாட்டோம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு மலிவான எரிசக்தியை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று டெல்லி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியா ரஷ்யா உறவு
உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் இச்சூழலில், ரஷ்ய எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% மேல் இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிற்கு, இந்த சலுகை விலைகள் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் மாஸ்கோ மீதான தடைகளைக் காரணம் காட்டி, ரஷ்ய எண்ணெய் மீதான சார்புநிலையைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அரசியல் சார்ந்ததல்ல என்றும், அது தேசிய நலன்களையும் எரிசக்தி பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.
இந்தியா அமெரிக்கா மோதல்
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசனது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications