நைட் உங்க வீட்ல தங்கலாமா? இருக்க இடமின்றி நண்பர்கள் வீட்டில் தூங்கும் எலான் மஸ்க்! பாவம்.. என்னாச்சு
நியூயார்க்: உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் உலக மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப் நிறுவனங்களை உருவாக்கி வழி நடத்தி வருபவர். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 27,360 கோடி அமெரிக்க டாலர்.
அதாவது 21 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இவரிடம் உள்ளது. இன்னும் பல நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்திலும் இவர் இருக்கிறார்.

ட்விட்டர்
வரும் நாட்களில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மூலம் இன்னும் பல லட்சம் கோடிகளை இவர் சம்பாதிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்தார். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார். இந்த நிலையில் ட்விட்டரை மொத்தமாக 43 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்துள்ளார். இதற்கான பிரச்சனை இன்னும் போய்கொண்டு இருக்கிறது.

பேட்டி
இந்த நிலையில் எலான் மஸ்க்கிடம் பேட்டி ஒன்றில் ஆண்டர்சன் என்பவர்.. உங்களிடம் நிறைய சொத்துக்கள் உள்ளது. ஆனால் பல நாடுகள் கடனில் உள்ளது. மக்கள் கடனில் இருக்கிறார்கள் என்று புகார் உள்ளதே அதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களிடம் வளம் அதிகமாக சேர்ந்துவிட்டதாக கூறுகிறார்களே அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதில் சொன்ன எலான் மஸ்க், என்னிடம் சொந்த வீடு கூட இல்லை.

சொந்த வீடு
நான் டெக்ஸாஸில் இருக்கும் போது வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். எனக்கு என்று சொந்த வீடு இல்லை. வேறு டெக்ஸாஸ் தொழிற்சாலை கிளைகளுக்கு செல்லும் போது என் நண்பர்கள் வீட்டில் தங்குவேன். இல்லையென்றால் தொழிலாளர்கள் வீட்டில் உங்களுடன் தங்கி கொள்ளட்டுமா.. இரவு மட்டும் தூங்க வரலாமா என்று கேட்டு தங்கிக்கொள்வேன். மாறி மாறி இப்படி தங்குவேன்.

எங்கே தங்குவேன்
நான் என்னுடைய சொத்தை எல்லாம் எனக்காக பயன்படுத்தினால் அது தவறு. அதை நானே பயன்படுத்தினால் மக்களின் பணத்தை நான் பயன்படுத்துகிறேன். சமத்துவமற்ற வளம் என்று சொல்லலாம். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அதை வைத்து தொழிற்சாலை உருவாக்குவது, வேலைவாய்ப்பு கொடுப்பது போன்ற பணிகளைத்தான் செய்கிறேன். நான் சொந்தமாக கப்பல் வைத்திருக்கவில்லை.

சொகுசு கப்பல்
நான் சொகுசு கப்பலில் எங்கும் செல்லவில்லை. தனி விமானம் இல்லை. விமானத்தில் செல்வது கூட நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே. மற்றபடி என்னிடம் வேறு சொத்து இல்லை. நான் தனிப்பட்ட வகையில் எனக்கு செலவு செய்யவில்லை. என் தனிப்பட்ட செலவு என்பது மிகவும் கம்மிதான் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னிடம் சொந்த வீடு இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

சொந்த வீடு
அவர் கடந்த 2020 மே மாதம் தனது physical சொத்துக்களை.. அதாவது வீடு, நிலம், விமானம் போன்றவற்றை விற்பனை செய்வதாக அறிவித்தார். அதன்படி கலிபோர்னியாவில் மட்டும் 7 வீடுகளை தனது உறவினர்களிடம் விற்பனை செய்தார். இதில் வந்த பணத்தை அப்படியே தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதில் இருந்து இவர் மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 50 ஆயிரம் டாலர் கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

2015
அதற்கு முன்பில் இருந்து கூட அவர் சொந்த வீட்டில் அதிகம் வசித்தது இல்லை. முன்னாள் கூகுள் சிஇஓ லாரி பேஜ் வீட்டில் 2015ல் எலான் மஸ்க் சில நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்டின் டெஸ்லா தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வந்த போது அங்கேயே எலான் மஸ்க் சில நாட்கள் தங்கி, அங்கேயே உறங்கி நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications