இந்தியாவால் கண்கள் சிவந்த அமெரிக்கா? பின்னணியில் இப்படி ஒரு காரணமா? இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை எதிர்க்க முக்கியமான சில காரணங்கள் உள்ளன, இந்தியா செய்த சில தவறுகள் காரணமாகவே அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவு அமையும் சூழல் இருந்தாலும்.. இப்போது அதில் சிக்கல்கள் நிலவுகின்றன.. விரைவில் அவை சரியாகும் என்று நம்புகிறேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு
வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹோவர்ட் லுட்னிக், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவது மற்றும் அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் BRICS அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) உச்சி மாநாட்டில் பேசிய லுட்னிக், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஆழமாக மதிக்கிறார், மேலும் இரு நாடுகளும் "சிறந்த உறவை" கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குகிறது.

டாலருக்கு எதிராக புதிதாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது, மனித வளம் அபரிமிதமாக இருக்கிறது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வியக்கத்தக்க அளவில் உள்ளது. இருப்பினும், இந்திய அரசாங்கம் சில விஷயங்களைச் செய்திருப்பது அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
"பொதுவாக இந்தியா ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இது அமெரிக்காவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயல். இந்தியா அமெரிக்காவிலிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கத் தொடங்கியுள்ளது, இது ஒரு நல்ல விஷயம்.. ஒரு நல்ல மாற்றம்.
BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) குழுவில் இந்தியாவின் பங்கேற்பு சரியானதாக இருக்காது. அமெரிக்க டாலரை ஆதரிப்பதிலிருந்து விலகிச் செல்வது சரியாக இருக்காது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்காவில் நண்பர்களை உருவாக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ சரியான வழி அல்ல. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவில் எதிரிகளை வேண்டுமானால் சம்பாதிக்கலாம். இதுதான் இந்தியா மீதான அமெரிக்காவின் கோபத்திற்கு காரணம்.
அதிபர் டிரம்ப் அதை நேரடியாகவும் மறைமுகமாவும் சுட்டிக்காட்டுகிறார், இந்திய அரசாங்கம் அதை புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை பேசி தீர்ப்பதன் மூலம் ஒரு நல்ல முடிவை எட்ட முடியும். பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்து, நேர்மையாக தீர்வு கண்டு நல்ல நிலைக்கு வரலாம். அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், என்று கூறி உள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று லுட்னிக் நம்பிக்கை தெரிவித்தார். சரியான நபர்களை வெளியுறவுத்துறையில் நியமிப்பதன் மூலம் இரு நாடுகளும் ஒரு நல்ல உடன்பாட்டை எட்ட முடியும். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம், ஏனெனில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம், என்று கூறி உள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்பான வெளியுறவுக்கொள்கை இறுதி செய்யப்பட உள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா 26 சதவிகித வரி விதிப்பை போடுகின்றது. இதை குறைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. முக்கியமாக இந்தியாவில் நடக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் விதமாக சில சலுகைகள் இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இதனால் வருவாய் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications