இந்தியாவுக்கு துரோகம்? அமெரிக்கா - ஆஸ்திரேலியா - ஜப்பான் செய்ததை பாருங்க.. குவாட் அறிக்கையை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மீட்டிங்கில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையில் பாகிஸ்தானை விமர்சனம் செய்யாமலும், பஹல்காம் நம் நாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டாமலும் உள்ளது. இதனால் குவாட் அமைப்பில் நம் நாட்டுடன் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் மீது ‛சாப்ட் கார்னர்' காட்டுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு நாடுகளும் தங்களின் நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக பிற நாடுகளுடன் கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. அப்படியான ஒரு கூட்டமைப்பு தான் குவாட். இந்த கூட்டமைப்பில் மொத்தம் 4 நாடுகள் உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குவாட் கூட்டமைப்பில் உள்ளன.

quad us jaishankar

இந்த குவாட் கூட்டமைப்பு என்பது கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் என்பது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். குறிப்பாக இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகள் கைகோர்த்துள்ளன.

இந்நிலையில் தான் ‛குவாட்' கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா வெளியறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகேஷி இவாயா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாறாக பாகிஸ்தானை விமர்சனம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பஹல்காம் இந்தியாவின் பகுதியாக இருந்தாலும் கூட அப்படி ஒரு வார்த்தை கூட அறிக்கையில் இடம்பெறவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தான் காரணம். பஹல்காமில் நுழைந்த ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு 26 பேரை கொன்றனர். இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகும். தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பு ஏற்று அறிக்கை வெளியிட்டது. அதன்பிறகு மறுத்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக ‛குவாட்' அமைப்பின் கூட்டறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சீனாவின் கிங்டாவோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியது தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு.

இந்த அமைப்பு சார்பில் கூட்டறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அந்தநாட்டின் ராணுவத்துக்கு எதிராக நடக்கும் மோதல் பற்றிய கவலை பகிர்ந்து கொள்ளப்பட்டது. மாறாக நம் நாட்டின் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

இதையடுத்து அந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்தார். இதையடுத்து அந்த கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் உள்ள குவாட் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+