"அவங்க கதையை முடிச்சிடுங்க".. இஸ்ரேல் பீரங்கி குண்டில் எழுதிய இந்திய வம்சாவளி அமெரிக்க அரசியல்வாதி!
நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதியான நிமராதா நிக்கி ஹேலி, இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி குண்டில், 'அவர்களை முடித்துவிடுங்கள்' என்று எழுதியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இருப்பினும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவும், பாலஸ்தீனத்திற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய வம்சாவளி அமெரிக்க அரசியல்வாதியான நிமராதா நிக்கி ஹேலி இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி குண்டில், 'அவர்களை முடித்துவிடுங்கள்' என்று எழுதியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நிமராதா நிக்கி ஹேலி கடந்த 2011 முதல் 2017 வரை தெற்கு கரோலினாவின் 116வது ஆளுநராகவும், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான 29 வது அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், ஜனாதிபதி அமைச்சரவையில் இடம்பிடித்த முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்நாட்டு மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர். மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications