இந்திய மாஸ்டர்மைண்டை.. அப்படியே கொக்கி போட்டு தூக்கிய டிரம்ப்..மொத்த கட்டுப்பாட்டில் வந்த எஃப்பிஐ
நியூயார்க்: அமெரிக்காவில் எஃப்பிஐ அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆட்சிக்கு கீழ் அமைய உள்ள அரசாங்கம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில்தான் அமைச்சரவை தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால்.. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்க மாட்டார். முக்கியமாக அரசு பதவிகளில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் டிரம்ப் அந்நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான எஃப்பிஐ பதவிக்கே.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை கொண்டு வர உள்ளாராம்.
கடந்த முறை அவரின் ஆட்சியில் அவருக்கும் எஃப்பிஐ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன. அந்த மோதல்களை சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான.. இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அந்த பதவிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
அமெரிக்காவின் அமைச்சர்கள் யார் யார் என்று விரைவில் டிரம்ப் தேர்வு செய்வார். அந்த வகையில் எஃப்பிஐ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்படவுள்ளாராம். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். கடந்த டிரம்ப் ஆட்சியில்.. அவர் வெற்றிபெற ரஷ்யா காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த விசாரணையில் டிரம்பிற்கு பெரிய உதவியாக இருந்தது காஷ்யப் காஸ் பட்டேல்தான்.
அதேபோல் டிரம்பின் முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள்.. உளவு ரீதியான முடிவுகளை டிரம்ப் எடுக்க காஷ்யப் காஸ் பட்டேல் காரணமாக இருந்தார். காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ தலைவராகும் முடிவை டிரம்ப் முன்பே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு செனட் சபை அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு அவையிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். செனட் சபையை கைப்பற்றிவிட்டார்.
இதன் காரணமாக காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ இயக்குனர் ஆவதில் சிக்கலே இருக்காது என்கிறார்கள். காஷ்யப் காஸ் பட்டேல் எஃப்பிஐ தலைவராக முடியாத பட்சத்தில் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளை செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்.. பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார்.
வெற்றி: அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், டொனால்ட் ஜே. டிரம்ப் 76 மில்லியன் வாக்குகளை கடந்து உள்ளது. . அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிக வாக்குகள் இதுவாகும். டிரம்ப்: 76,133,250 ஹாரிஸ்: 73,237,314 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இது போக கடந்த 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 73,237,314 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிரம்ப் 76,133,250 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவிகித அடிப்படையில் 47 9 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.
50 மாகாணங்களில் 30 மாகாணங்களில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார் மீதம் 20 மாகாணங்களில் மட்டுமே கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கலிபோர்னியா தவிர கமலா ஹாரிஸ் பெரிய மாகாணங்களில் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
அதோடு இல்லாமல்.. டிரம்ப் ஃப்ளோரிடா தொடங்கி பெரிய மாகாணங்களில் அதிகம் வென்றுள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 312 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்றுள்ளார்.
அமெரிக்கா ஆட்சி முறை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில்.. தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை அறிவித்து வருகிறார்.அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.
வெளியேறவுத்துறை அமைச்சர்: அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை டிரம்ப் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்: டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார் என்கிறார்கள். இவர் முன்னாள் ராணுவவீரர் . கடுமையான சீன எதிர்ப்பாளர். சீனாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் . ரஷ்யாவை உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எதிர்பார்க்கும் நிலையில் இவரின் வருகை கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications