உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை
நியூயார்க்: உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம் கடைசியில் இந்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தச் சட்ட மசோதாவால் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களை கலந்தாலோசிக்காமல், திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ மத்திய அரசு இவ்வளவு விரைவாக நிறைவேற்றியதை நாங்கள் வருத்தத்துடன் பதிவு செய்கிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
2026-ல் நிறைவேற்றப்பட்டுள்ள திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா, திருநங்கையர் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த சில முக்கிய அம்சங்களை இந்த 2026 திருத்தம் தலைகீழாக மாற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள முக்கிய திருத்தங்கள் என்ன..ஏன் எதிர்க்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

பழைய விதிப்படி ஒரு திருநங்கை தனது பாலினத்தை அவரே தீர்மானித்து, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அடையாளச் சான்றிதழ் பெறலாம். இதற்கு மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. புதிய திருத்தப்படி, இனி ஒரு நபர் திருநங்கை என்று சான்றிதழ் பெற வேண்டுமென்றால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சான்றளித்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும்.
'பெண்' அல்லது 'ஆண்' என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், கண்டிப்பாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை (Sex செய்திருக்க வேண்டும் என்றும், அதற்கான மருத்துவச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திருத்தம் வலியுறுத்துகிறது.
மருத்துவக் குழுவின் முன் ஆஜராகி உடல் ரீதியான பரிசோதனைகளைச் செய்துகொள்வது திருநங்கைகளின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், "போலிச் சான்றிதழ்களைத் தடுக்கவே" இந்த முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறது.
திருநங்கைகள் தங்கள் பெற்றோருடன் அல்லது குடும்பத்துடன் தங்குவதை இந்த மசோதா ஊக்குவிக்கிறது. குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுத்தால் மட்டுமே மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், பல நேரங்களில் குடும்பங்களே திருநங்கைகளுக்கு எதிராக இருப்பதால், இது அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அல்லது வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை காலத்தை அதிகரிக்க சில திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் இது பெண்களுக்கு இணையான தண்டனையாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. ஒருவர் தன்னை யார் என்று உணர்கிறாரோ, அதுவே அவரது அடையாளம். அதை ஒரு மருத்துவக் குழு ஆய்வு செய்வது மனித உரிமை மீறல்" என்பதே இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் வாதமாக உள்ளது. ஐநா வரை எதிர்ப்பு வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் "இந்தியாவில், திருநங்கை, திருநம்பிகளை கலந்தாலோசிக்காமல், திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ இவ்வளவு விரைவாக நிறைவேற்றியதை நாங்கள் வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இந்தத் திருத்தங்கள், திருநங்கையர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வென்றெடுத்த உரிமைகளைப் பின்னோக்கித் தள்ளிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, தனிநபர் தனது பாலினத்தைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கட்டாய மருத்துவச் சான்றிதழ் பெறும் முறையை இது கொண்டுவருகிறது.
திருநங்கையர் மற்றும் பாலினப் பன்முகத்தன்மை கொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருந்துள்ளது. ஆனால், இந்த மசோதா தனிநபர் அந்தரங்க உரிமை மற்றும் திருநங்கைகள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் ஆபத்து போன்ற நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தும்." என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சமூகத்தினருடன் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்றியது தவறு என்று ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு நபர் தனது பாலினத்தை அவரே தீர்மானிக்கும் உரிமை பறிக்கப்பட்டு, அதற்குப் பதில் மருத்துவக் குழுவின் பரிசோதனை மற்றும் சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவது திருநங்கைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பாலினத்தை நிரூபிக்கும்போது, அவர்களின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்படாது என்பது ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தியாவை ஒரு முன்மாதிரியாகப் பார்த்த உலக நாடுகள் மத்தியில், இந்த மசோதா இந்தியாவின் முன்னேற்றமான அணுகுமுறைக்கு முரணாக அமையும் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?













Click it and Unblock the Notifications