இனி பேச்சே கிடையாது! அமெரிக்காவின் ப்யூசை பிடுங்கிய ஈரான்! டிரம்ப் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டாரே
நியூயார்க்: இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் தயாராக இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஈரான் போர் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்காவின் பேச்சை இனி கேட்க தயாராக இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.
அதோடு ஈரான் - அமெரிக்கா இடையிலா அணு ஆயுத பேச்சுவார்த்தையும் இனிமேல் நடக்காது என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் இந்த முடிவை கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தர்கள் வழியாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், போர் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் போர் நிறுத்த பேச்சுக்கு வாய்ப்பில்லை
இஸ்ரேலின் தாக்குதல்கள் அனைத்திற்கும் முறையாக ஈரான் பதிலளித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என்று ஈரான் கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தர்களுக்குத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலின் போது ஈரான் பேச்சுவார்த்தை நடத்தாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்கிக்கொண்டு இருக்கும் போது நாங்கள் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் நடத்த முடியும், என்று ஈரான் கேள்வி எழுப்பி உள்ளது.

இஸ்ரேலுக்கு முழுமையாக பதிலடி கொடுத்த பின்பே.. இஸ்ரேலுக்கு நரகத்தை கதவை காட்டிய பின்பே.. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று ஈரான் சபதம் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மிகப்பெரிய போராக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த தகவல்
இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் முக்கிய எதிரியாக கருதுகிறது.. தங்களின் முதல் எதிரியாக கருதுகிறது.. இதனால் அவரை தீர்த்துக்கட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.. அதனால் அவரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார்.
டிரம்ப் உயிருக்கு ஈரான் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொலை செய்ய ஈரான் சதி செய்துள்ளது., டிரம்ப் ஈரானின் எதிரி எண் ஒன்றாக இருக்கிறது என்றும் நெதன்யாகு கூறினார்.
ஈரான், டிரம்ப்-பை கொலை செய்ய ஏற்கனவே முயன்றது என நெதன்யாகு தெரிவித்திருந்தார். "அவர்கள் டிரம்ப்பை கொல்ல விரும்புகிறார்கள். அவர் தான் எதிரி நம்பர் ஒன்.. அமெரிக்காவின் செயல்களை அவர்களை விரும்பவில்லை. அமெரிக்காவிற்கு மரணம் என்று முழக்கமிடும் இந்த மக்கள், அதிபர் டிரம்ப்பை இரண்டு முறை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. இனியும் அவர்கள் இதை செய்வார்கள்.
இப்படிப்பட்டவர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் சென்றால் எவ்வளவு மோசமாக இருக்கும். டிரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். மற்றவர்கள் பலவீனமாக பேச்சுவார்த்தை நடத்தி யுரேனியத்தை செறிவூட்ட வழிவகுத்தனர். ஆனால் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். காசெம் சோலைமானியை கொன்றார். நீங்கள் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அதாவது யுரேனியத்தை செறிவூட்ட முடியாது என்பதை தெளிவாக கூறினார். அவர் மிகவும் உறுதியானவர், அதனால்தான் அவர்களுக்கு எதிரி நம்பர் ஒன்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஈரான் முக்கிய எதிரியாக கருதுகிறது.. தங்களின் முதல் எதிரியாக கருதுகிறது.. இதனால் அவரை தீர்த்துக்கட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.. அதனால் அவரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications