ஈரானின் அஸ்திவாரத்தை.. ஒரே அட்டாக்கில் நிர்மூலம் செய்த இஸ்ரேல்! இனி என்ன நடக்குமோ? மாட்டிக்கிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானின் மிக முக்கியமான அஸ்திவாரத்தை இஸ்ரேல் நிர்மூலம் ஆகி உள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.

அதோடு இல்லாமல்.. ஈரான் தங்களின் சொந்த போர் விமானங்களை ரேடார் மூலம் வழிகாட்ட முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள். சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

iran israel palestine

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.

முன்னதாக ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து இருந்தார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது இஸ்ரேல் லேசான தாக்குதலை நடத்தி உள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை: இப்படிப்பட்ட நிலையில்தான் 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக உலக நாடுகள் இருப்பதாக.. முக்கியமாக அமெரிக்கா இருப்பதாக அமெரிக்கா அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜோ ரோகன் என்ற பிரபல யூ டியூபரின் சேனலில் அளித்த பேட்டியில், 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக நாம் இருக்கிறோம். இன்று இருப்பதை விட 3-ம் உலகப் போருக்கு நாம் நெருக்கமாக இருந்ததில்லை. அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் சரியாக இல்லை. இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசம் அடைந்து உள்ளது.

நான் இருந்தால் இந்த போரை நிறுத்துவேன். ஒரே நாளில் போரை நிறுத்துவேன். கமலா ஹாரிஸின் தவறான முடிவுகள் காரணமாக நமது வெளியுறவுக்கொள்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரால் இந்த போரை எல்லாம் நிறுத்த முடியாது, என்று கூறி உள்ளார்.

முன்னதாக ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் இஸ்ரேல் இந்த ஐடியாவை பயன்படுத்தவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.

ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால் டிரம்பின் இந்த ஐடியாவை இஸ்ரேல் கேட்கவில்லை . அவர் திட்டத்தை இஸ்ரேல் கேட்காமல்.. லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+