நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறிச்ச தேதியில் உயிரை விட்ட நபர்.. இப்படி நடக்குமா?.. தனக்கு தானே நாள் பார்த்து.. அதிர்ந்த அமெரிக்கா

தன் மரணத்துக்கு முன்கூட்டியே தானே தேதி குறித்து வைத்த நபர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: தன் மரணத்துக்கு தானே தேதி குறித்து கொண்ட நபர் பற்றின செய்திதான் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்துள்ளார் அந்த நபர்.. கடந்த 2ம் தேதி அன்று மாலை 6:30 மணி இருக்கும்.. அந்த நபர், வாஷிங்டன் நகரில் இருக்கும் சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்கு சென்றார்.

ஏராளமானோர் நடமாடி கொண்டிருந்த நேரத்தில், அந்த கோர்ட் கட்டிடத்தில் வந்து நின்றுகொண்டு திடீரென தனக்குதானே தீ வைத்து எரித்து கொண்டார்.

கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்

 தற்கொலை

தற்கொலை

ஒரே செகண்டில் உடம்பு முழுவதும் நெருப்பு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.. இதை பார்த்து அங்கிருந்த போலீசார் விரைந்து ஓடிவந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனளிக்காமல் அந்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதற்கு பிறகு, அவர் யார் என்று விசாரணையும் ஆரம்பித்தனர்.. அவர் கொலராடோ மாகாணத்தின் போல்டர் பகுதியை சேர்ந்தவராம்.. பெயர் புரூஸ் என்பதும், 50 வயதாகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

 ஆச்சரியம்

ஆச்சரியம்

இவர் தன்னுடைய தற்கொலைக்கு முன்பு பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டதையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். அதில், தன் பெயர் வின்புரூஸ் என்றும், புத்த மதத்தினை சேர்ந்தவர் என்றும், பருவகால செயற்பாட்டாளர் என்றும் பதிவு செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் இவர் போட்ட ஒரு பதிவுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.

 பெண் சாமியார்

பெண் சாமியார்

அந்த பதிவில், 4/22/2022 அன்று நான் இறந்துவிடுவேன் என்று குறிப்பிட்டு, அத்துடன் தீ பற்றிய எமோஜி ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.. அதெப்படி நாள் குறித்துவைத்துவிட்டு, அதுபோலவே இறக்க முடியும் என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது.. இறந்துபோன புரூஸ் பற்றி, அவருடைய நண்பர் க்ரித்தீ என்பவர் சொல்லும்போது, "நான் ஒரு டாக்டர்.. பெண் சாமியாரும்கூட.. புரூஸ்ஸை பல காலமாகவே எனக்கு தெரியும். அவர் என்னுடைய நண்பர்...

நெருக்கடி

நெருக்கடி

ஆனால், இது தற்கொலை கிடையாது.. பருவகால நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் கையாண்ட இரக்கமற்ற அச்சமற்ற செயல் இது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, பருவகால நெருக்கடி பற்றிய தகவலை நாங்கள் ஒன்றாகவேதான் சேகரித்து வந்தோம். ஆனால், இந்த இப்படி ஒரு காரியத்தை செய்வதற்கு புரூஸ், கடந்த ஒருவருடமாகவே திட்டமிட்டு வந்துள்ளார் என்றும் அந்த பெண் சாமியார் கூறியுள்ளார்.

English summary
Is it true and seasonal activist mentioning the date of his death in advance near us supreme court தன் மரணத்துக்கு முன்கூட்டியே தானே தேதி குறித்து வைத்த நபர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X