நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு எதிரான.. ஐநா கவுன்சிலின் கூட்டு அறிக்கை.. மீண்டும் தடுத்தது அமெரிக்கா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட இருந்த கூட்டு அறிக்கையை மூன்றாவது முறையாக அமெரிக்கா தடுத்து நிறுத்தி உள்ளது. மோதலை நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட இருந்த நிலையில் அதை அமெரிக்கா தடுத்துள்ளது.

Recommended Video

    Israel-Gaza பகுதிகள் Google Maps-ல் மங்கலாக இருக்க என்ன காரணம்?

    இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்வது வருவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் போராளி குழு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது.

    இதனால் காஸாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸா - இஸ்ரேல் இடையிலான இந்த மோதல் கடந்த 10 நாட்களாக மிக தீவிரமாக, கிட்டத்தட்ட போருக்கு இணையாக நடந்து கொண்டு இருக்கிறது.

    கொரோனா போர் நிகழும் போது ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து! கொரோனா போர் நிகழும் போது ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து!

    கண்டிப்பு

    கண்டிப்பு

    இதுவரை நடந்த மோதலில் காஸாவில் உள்ள 200க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் இஸ்ரேல் தரப்பில் 15 பேர் வரை பலியாகி உள்ளனர். மொத்தமாக காஸாவில் ஹமாஸ் படையை காலி செய்யும் விதமாக இஸ்ரேல் தாக்கி வருகிறது. தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக அறிவித்துள்ளார்.

    மூன்று கூட்டம்

    மூன்று கூட்டம்

    மோதலை உடனே நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பல கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் இதோடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை இதற்காக அவசர கூட்டம் நடத்தப்பட்டுவிட்டது. உடனடியாக மோதலை நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் இதற்கு ஆதரவு தெரித்துள்ளன. இதில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசி இருந்தாலும், உடனே மோதலை நிறுத்த வேண்டும் என்று கூறியது.

    மோதல்

    மோதல்

    அமெரிக்காவும் கூட, இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளும் மோதலை நிறுத்த வேண்டும். இரண்டு நாட்டு தரப்பிடமும் நாங்கள் பேசி வருகிறோம். முடிந்த அளவு மோதலை நிறுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்த எங்களால் முடிந்த பணிகளை செய்து வருகிறோம் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இஸ்ரேல் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால்

    ஆனால்

    இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி வேண்டும் என்று அமெரிக்கா தனது கருத்தில் தெரிவித்து இருந்தாலும் கூட, இரண்டு நாட்டு மோதல் நிறுத்தம் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டு அறிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட இருந்த கூட்டு அறிக்கையை மூன்றாவது முறையாக அமெரிக்கா தடுத்து நிறுத்தி உள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யுனைட்டட் கிங்டம் ஆகிய நாடுகள் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தை கொண்டு இருக்கிறது. இதனால் இந்த நாடுகளில் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட்டு அறிக்கை தாக்கல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற வீட்டோ நாடுகள் கூட்டு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அமெரிக்கா மட்டும் கூட்டு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பிடன்

    பிடன்

    இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் பிடன் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் பாலஸ்தீன பிரதமர் அப்பாஸ் உடன் பிடன் போனில் பேசிய பின் சிறிய நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் தற்போது இஸ்ரேலின் தாக்குதலுக்கு மறைமுகமாக அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. மோதல் நிறுத்த கூட்டு அறிக்கையை தடுத்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

    English summary
    Israel - Gaza conflict: the USA blocks the joint statement against the clash for the 3rd time in the UNSC meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X