நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழுந்து விழுந்து சிரித்த மோடி.. ஒரே ஜோக்தான்.. அப்படியென்ன சொன்னார் அதிபர்.. வெள்ளை மாளிகை ருசிகரம்

அதிபர் ஜோக் அடித்ததற்கு பிரதமர் மோடி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜோ பிடன் ஒரு ஜோக் சொன்னாராம்.. அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த ருசிகரமான சம்பவம்தான் உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.

3 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. அதிபராக பிடன் தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு இப்போதுதான் முதன் முறையாக அமெரிக்காவுக்கு செல்கிறார்.

இதையடுத்து இருவருமே நிறைய விஷயங்களை கலந்தாலோசித்தனர்... பொருளாதாரம், வணிகம் , கொரோனா நிலவரம், சர்வதேச பிரச்னைகள், ஆப்கன் விவகாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது...

'பாடும் நிலா' எஸ்.பி.பி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.. எஸ்.பி.பி சரண் விளக்கம்!'பாடும் நிலா' எஸ்.பி.பி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.. எஸ்.பி.பி சரண் விளக்கம்!

 பேட்டி

பேட்டி

இதையடுத்து இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.. அந்த பேட்டியிலும் நிறைய விஷயங்களை வெளிப்படுத்தி பகிர்ந்து கொண்டனர்.. தொடர்ந்து பேசி கொண்டே வந்த பிடன், " 1972ல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் மும்பை வந்திருந்தேன்.. அப்போது, செய்தியாளர்கள் என்னிடம், பிடன் என்ற பெயரில் இந்தியாவில் மொத்தமே 5 பேர் இருக்கிறார்கள்..

 5 பிடன்கள்

5 பிடன்கள்

உங்களுக்கு யாராவது இங்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டனர்... ஆனால், இப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்துள்ளது... இந்தியாவில் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் பணியாற்றிய கேப்டன் ஜார்ஜ் பிடன் என்று ஒருவர் இருக்கிறாராம்.. அவர் அங்கேயே தங்கி ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்துக்கிட்டாராம்.. ஆனால், என்னால் அதை கண்காணிக்க முடியவில்லை...

 சிரிப்பு

சிரிப்பு

அவரை தவிர்த்து வேறு பிடன்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது... அப்படி இருந்தால் பிரதமர் மோடி தான் கண்டுபிடித்துத் தர வேண்டும்" என்று ஜோக் அடித்தார்... உடனே அதை கேட்டு மோடி விழுந்து விழுந்து சிரித்தார்.. பிடன் பேச்சுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நிச்சயமாக உதவி செய்கிறேன்.. அதுக்காகத்தானே இந்தியாவிலிருந்து நிறைய ஃபைல்களை கொண்டு வந்திருக்கிறேன்... இதெல்லாம் உங்களுக்கு உதவும்" என்று சிரித்து கொண்டே சொன்னார்..

Recommended Video

    Modi US Visit | மோடியின் Boeing 777-க்கு Pakistan அனுமதி | Oneindia Tamil
     செய்தியாளர் சந்திப்பு

    செய்தியாளர் சந்திப்பு

    இதைக் கேட்ட பிடன், "இப்போ நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.. இப்படி இரு தலைவர்களின் இந்த அரட்டை பேச்சால் அந்த அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. பொதுவாக, இப்படி இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து கொண்டால், இறுக்கமாகவே இருப்பார்கள்.. அது அரசு முறை பயணம் என்பதால், அந்த சந்திப்பில் என்ன பேச வேண்டும், செய்தியாளர்கள் சந்திப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே தயாராவார்கள்..

     இறுக்கம்

    இறுக்கம்

    அதற்கேற்றபடிதான் அந்த பயணத்தை முடித்து கொண்டு வருவார்கள்.. ஆனால், அதெல்லாம் மீறி இந்த முறை கேஷூவலாக இரு தலைவர்களும் பேசி கொண்டது ஆச்சரியத்தை கிளப்பி உள்ளது. அதிலும் அமெரிக்கா தன்னுடைய நடைமுறை மரபுகளை உடைத்து விட்டு, இறுக்கத்தையும் தளர்த்திவிட்டு, இந்தியாவிடம் ஜாலியாக பேசியதை உலகமே வியந்து பார்த்து வருகிறது..!

    English summary
    Joe Biden jokes about possible India connection in meeting with PM Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X