இன்னும் 20 மணி நேரம்தான்.. கடலுக்கு உள்ளே நீர்மூழ்கியில் போராடும் 5 உயிர்கள்.. திக் திக் டைட்டானிக்
நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர் மூழ்கி கடலுக்கு அடியில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நீர் மூழ்கியை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video
கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இந்த டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.
காணவில்லை: டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது.
கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மாயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
எவ்வளவு நேரம் இருக்கு?: டைட்டன் கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.
இந்த கப்பலை மீட்க இன்னும் 20 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்கு பின் கப்பலுக்கு உள்ளே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் உயிர்களை மீட்க போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
என்ன நடக்கும்?: ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வரவும் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும். அதற்கு கூட ஜிபிஎஸ் பார்த்து இயக்க முடியாது. மேலே இருக்கும் கப்பலில் இருந்து சிக்னல் மூலம் மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்து கீழே கப்பலனை ஜாய் ஸ்டிக் மூலம் இயக்க வேண்டும். தானாக இதை இயக்கி மேலே கொண்டு வரவே முடியாது. இந்த நிலையில்தான் அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போய் உள்ளது.
என்ன நிலை?: இந்த கப்பலை மீட்க அமெரிக்கா, கனடாவின் விமானப்படை, கடற்படை களத்தில் இறங்கி உள்ளது. இந்த நீர் மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி)ன் அளவு மட்டுமே கொண்டது. ஒரு விமானி மற்றும் நான்கு பயணிகள் - ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும். உள்ளே இவர்களின் நிலை என்ன என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications