போலீஸ் ரோந்துக்கு ரோல்ஸ் ராயஸ் கார்! என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மியாமியில் விநோதம்
நியூயார்க்: அமெரிக்காவின் மியாமி கடற்கரை போலீஸ் ரோந்துக்காக 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை களமிறக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சொகுசு கார்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுவது ரோல்ஸ் ராய்ஸ்தான். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காரின் உள்ளே ஒவ்வொரு பாகமும் சிறப்பாக தயாரிக்கப்படும். இதன் தனித்துவமான என்ஜின் மற்றும் செயல்திறனுக்காகவே ஏராளமானோர் இந்த காரை வாங்குவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருப்பதே பெருமை என உலக கோடீஸ்வரர்கள் கருதுகிறார்கள்.

இப்படி சிறப்பு வாய்ந்த காரை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி கடற்கரை போலீஸ் ரோந்து வாகனமாக மாற்றியிருக்கிறது. இது குறித்து ஏராளமான கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு விலையுயர்ந்த காரை எதற்காக வாங்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மியாமி காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. அதாவது, "போலீஸ் படைக்கான ஆட்சேர்ப்பு பகுதியின் ஒரு அங்கமாக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், ரோந்து பணிக்காக வழங்கப்பட்டு உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காரை தயாரிக்கும் பிராமன் மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொந்த செலவில் ஸ்பெஷலாக இக்காரை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் எங்களது சேவை மேலும் சிறப்பானதாக இருக்கும்" என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இக்கார் 100 கி.மீ வேகத்தை வெறும் 5 நொடிகளில் எட்டிவிடும். என்னதான் சிறப்பான காராக இருந்தாலும் இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.8 கி.மீதான் மைலேஜ் கொடுக்கும். காரில் 100 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்ப முடியும். அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும். இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும். கண்ணாடிகள் குண்டு துளைக்காக வகையிலும், எளிதில் கவிழாத வகையிலும் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பவர் ஸ்டேரிங் அம்சத்தை கொண்ட இந்த காரில் 12 சிலிண்டர்கள் இருக்கும். இது அதிகபட்சமாக 563bhp@5000rpm பவரை உற்பத்தி செய்யும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 164 மி.மீ என்பதால் இந்திய சாலைகளிலும் இந்த காரை ஓட்ட முடியும்.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட காரை, போலீஸின் ரோந்து பணிக்காக மியாமி கடற்கரை காவல்துறை களமிறக்கியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications