மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் மகன் திடீர் மரணம்.. 26 வயதுதான்.. என்ன காரணம்?
நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் 26 வயதே ஆன மகன் நேற்று காலமானார்.
Recommended Video
சத்யா நாதெல்லாவின் மகன் ஜைன் நாதெல்லா மரணம் அடைந்தது குறித்த தகவல் இன்று காலை அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்றே ஜைன் நாதெல்லா மரணம் அடைந்துவிட்ட நிலையில் இன்றுதான் மெயில் மூலம் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிஇஓ சத்யா நடெல்லா
இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் நாதெல்லாவின் குடும்பத்தினருக்கு உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பியுங்கள். அவர்களின் குடும்பத்தோடு துக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். அதே சமயம் நாதெல்லா குடும்பம் தங்கள் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சத்யா நாதெல்லா - அனு நாதெல்லா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் ஜைன் நாதெல்லா.

மைக்ரோசாப்ட்
சத்யா நாதெல்லாவின் மகன் சைனுக்கு சிறு வயதில் இருந்தே cerebral palsy குறைபாடு இருந்தது. இது மூளையில் ஏற்படும் குறைபாடு அல்லது காயம் காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் cerebral palsy பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படாது அல்லது முறையாக இயங்காது. பெரும்பாலும் இந்த பாதிப்பு கொண்டவர்கள் நடக்க முடியாமல் வீல் சேரில் அவதிப்படுவதும் வழக்கம்.

மரணம்
இவர்களில் சிலருக்கு ஆயுளும் குறைவாக இருக்கும். இந்த நிலையில்தான் cerebral palsy காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜைன் நாதெல்லா மரணம் அடைந்து இருக்கிறார். இவரின் உடல்நிலை கடந்த ஒரு வருடமாக மோசமாக இருந்தது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் பலியானார்.

சத்யா நடெல்லா
முன்னதாக சத்யா நாதெல்லா 2014ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை ஏற்றார். அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் மாற்று திறனாளிக்கும் பலன் அளிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் செயலிகளில் மாற்றம் கொண்டு வர முயன்றார். தனது மகன் ஜைன் உள்ளிட்ட எல்லோரும் மைக்ரோசாப்ட் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு நிகழ்வில் இவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சத்யா நடெல்லா மகன்
இது தொடர்பாக ஜைன் நாதெல்லா சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜைன் சிறந்த இசை ஆர்வம் கொண்டவர். அவர் நல்ல அமைதியான தோற்றமும், சிரிப்பும் கொண்டவர். அவர் எங்கள் மருத்துவமனையில் மிகவும் மகிழ்வுடன் இருந்தார். அவரின் பெற்றோரை அதிகம் விரும்பினார். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும், என்று குறிப்பிட்டு உள்ளனர். ஹைதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர் சத்யா நாதெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications