எல்லைக்கு விரையும் 10 ஆயிரம் படைவீரர்கள்.. அமெரிக்காவில் வேலையை காட்டும் டிரம்ப்.. நிலைமை மோசமாகுது
நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற்றப்பட உள்ளனர். இதற்காக தெற்கு எல்லைக்கு 10 ஆயிரம் படை வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக பென்டகன் 1500 படை வீரர்களை எல்லைக்கு அனுப்பி உள்ளது. அத்துமீறி குடியேறியவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவுவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு வந்து உள்ளார். அவரின் உத்தரவின் கீழ் இந்த ரெய்டு தொடங்கி உள்ளது.
எமர்ஜென்சி:
தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே அவர் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.
இதை பிடன் - கமலா அரசு தடுக்க தவறிவிட்டதாக புகார்களை வைத்தார். அதிலும் இந்த விவகாரத்திற்கான border czar துறையை கமலா நேரடியாக கவனித்து வந்தார். அவர் எல்லையை பாதுகாக்க தவறிவிட்டார் என்று புகார்களை டிரம்ப் வைத்தார். இப்படிபட்ட நிலையில்தான் தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமித்து உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு இந்த விவகாரம் முக்கியமான காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான்.. டிரம்ப் வென்றதும் விரைவில் அங்கே முறைகேடாக குடியேறி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடி எமர்ஜென்சி சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த வகையில் இன்று முதல் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications