டொங் டொங்! டைட்டானிக்கை பார்க்க போய்.. மூழ்கிய நீர் மூழ்கி! தேட போன இடத்தில்.. ஆழ்கடலில் மர்ம சத்தம்
நியூயார்க்: கனடா அருகே கடல் பகுதியில் மூழ்கிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஆழ்கடலில் திடீரென அந்த பகுதியில் சத்தம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இந்த உடைந்த கப்பலை பார்க்க பலர் ஆழ்கடலுக்கு செல்வது உண்டு. அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.
டைட்டானிக் கப்பலை பார்க்க நேற்று முதல்நாள் இரவு சென்ற இந்த கப்பல்தான் தற்போது காணாமல் போய் உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எடை 23,000lb (10,432 கிலோ) மற்றும் அவர்களின் கணக்கீடு படி, 13,100 அடி வரை ஆழத்தை எட்டும் திறன் கொண்டது.
காணவில்லை: இந்த கப்பலில் சென்ற நீர் மூழ்கி பைலட் உட்பட 5 பேர் காணாமல் போய் உள்ளனர். டைட்டன் கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.
கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மாயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வருவோம் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை. இதனால் இதை மீட்பது கடினம் ஆகி உள்ளது.
சத்தம்: இந்த நிலையில் ஆழ்கடலில் திடீரென அந்த பகுதியில் சத்தம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கப்பல் இருப்பதாக கருதப்படும் பகுதிகளுக்கு அருகே டொங் டொங் என்று சத்தம் வந்துள்ளது. மீட்பு கப்பல்களில் இருந்த சொன்னார் கருவிகளில் இந்த சத்தம் பதிவாகி உள்ளது.
இதையடுத்து சோதனைகள் இன்னொரு சோனார் கருவியை கொண்டு வந்துள்ளனர். அதிலும் இந்த சத்தம் உறுதியாக கேட்டுள்ளது. சரியாக 3 நிமிட இடைவெளியில் அங்கே சத்தம் விட்டு விட்டு கேட்டுள்ளது. இது தற்போது நம்பிக்கை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மேலே சோனார் கருவிகள் இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு கீழே இருந்து பயணிகள் நீர்மூழ்கியில் அடித்து அடித்து சத்தம் எழுப்புகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சத்தம் கேட்கும் பகுதிகளில் தற்போது சோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications