அசுர வேகத்தில் பூமியை நோக்கி வரும் 2 விண்கற்கள்.. இன்னைக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கு!
நியூயார்க்: பூமிக்கு விண்கற்களால் ஆபத்து இருக்கிறது என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இன்று இரண்டு பெரிய விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, “நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது” என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இப்படி இருக்கையில் இன்று பூமிக்கு நெருக்கமாக இரண்டு விண்கற்கள் வரும் என்று நாசா எச்சரித்துள்ளது.
ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) இதனை கூறியிருக்கிறது. 2024 RZ10 மற்றும் 2024 RZ10 (இரண்டுக்கும் ஒரே பெயர்தான்) ஆகிய இரண்டு விண்கற்கதான் இன்று பூமிக்கு நெருக்கமாக வர இருக்கிறது. இதில் முதல் 2024 RZ10 விண்கல், 110 அடி விட்டம் கொண்டது. பூமியை 33 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்ல இருக்கிறது. ஒருவேளை இது பூமியை தாக்கினால், ஹிரோஷிமாவில் விழுந்த அணு குண்டு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதைவிட 100 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ அகலத்திற்கும், 1 கி.மீ ஆழத்திற்கும் பெரும் பள்ளம் உருவாகும். மட்டுமல்லாது கல் விழுந்த இடத்திலிருந்து நூறு கி.மீ பரப்பளவில் 7-8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். கடலில் விழுந்தால் பெரிய சுனாமி உருவாகும். ஆனால் இக்கல் பூமியில் விழுவதற்கான வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதேபோல இரண்டாவது 2024 RZ10 விண்கல், பூமியை 11 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்கிறது. இது செல்லும் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு பூமியை தாக்கினால் அவ்வளவு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாதுதான். ஆனால் உயிரிழப்புகள் சில நூறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த இரண்டு கற்களும் இன்று பூமியை கடந்து செல்கிறது.












Click it and Unblock the Notifications