ஆயுதங்களை கொடுங்க.. நாங்க கதையை முடிக்கிறோம்! அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நெதன்யாகு சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இப்படி இருக்கையில், ஹமாஸ் சரணடைந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாத வரை காசாவில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுதியாக கூறியுள்ளார். மேலும் இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகு சிறப்புரையாற்றினார். அதில், "எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள். நம் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். எங்கள் வெற்றி, உங்களுக்கான வெற்றியாகும். நாங்கள் ஈரானுடன் போராடுகிறோம். ஆனால், அமெரிக்காவை பொருத்தவரை உங்களுடைய கொலைகார எதிரியுடன் நாங்கள் போராடுகிறோம். அவர்கள் அமெரிக்காவை தாக்க நினைக்கிறார்கள். அதற்கு முன்னர் மத்திய கிழக்கை கைப்பற்ற வேண்டும்.

Gaza Israel Netanyahu

அங்கு பெருமைமிக்க அமெரிக்க சார்பு ஜனநாயக அரசாக இஸ்ரேல் இருக்கிறது. அது ஈரானுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆயுதங்களை வழங்கியதற்கு நன்றி. அதற்கு பதிலாக அமெரிக்கர்கள் பலரின் உயிரை காப்பாற்றும் அளவுக்கு நாங்கள் உளவு தகவல்களை கொடுத்து வருகிறோம். இப்போது அமெரிக்க செய்ய வேண்டியது ஆயுத உதவிதான். நீங்கள் ஆயுதங்களை கொடுங்கள். நாங்கள் அவர்களின் கதையை முடிக்கிறோம்.

ஹமாஸ் சரணடைந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாத வரை காசாவில் போர் தொடரும்" என்று நெதன்யாகு நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இவருடன் சிறப்பு விருந்தினராக உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், நெதன்யாகு வருகைக்கும், அவரது உரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான போராட்டக்கார்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு முழக்கம் எழுப்பினர். குறிப்பாக வாஷின்டன் டிசியில் உள்ள யூனியன் ஸ்டேஷன் அருகில் இருக்கும் Flags Squareல் கொடி மரத்தில் இருந்து அமெரிக்க நாட்டு கொடி இறக்கப்பட்டு அதில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டது. இதனால் லேசான பதற்றம் ஏற்பட்டது.

பின்னணி: கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். "ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு" என்று கூறியுள்ளார்.

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+