"மூளைக்குள் புகுந்த ஜோம்பி கிருமி.." இறந்த வண்டு திடீரென எழுந்து நடந்தது.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்
நியூயார்க்: அமேசான் வனப்பகுதியில் இறந்துபோன ராட்சத வண்டு ஒன்று நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.
'ஜோம்பி' (zombie) திரைப்படங்களில் வருவதை போலவே காணப்படும் இந்த வீடியோவுக்கு உயிரியல் விஞ்ஞானிகள் அளித்துள்ள விளக்கம் மேலும் பீதியை கிளப்புவதாக உள்ளது.
இதுவரை நாம் வெறும் திரைப்படம்தானே என நினைத்து பார்த்தவை எல்லாம் உண்மை என தெரியவந்தால் எந்த அளவுக்கு வியப்பாக இருப்போமோ அதே உணர்வைதான் இந்த சம்பவமும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாக காணலாம்.

உண்மையாகும் 'ஜோம்பி' திரைப்படங்கள்
ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பல ஜோம்பி திரைப்படங்களை பார்த்திருப்போம். அதாவது இறந்து போன மனிதர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெற்று, ஊரில் உள்ள பிற மனிதர்களை கொல்வதை போல அந்த திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். இறந்து போனவர்களின் உடலில் ஒரு வகை வைரஸ் புகுந்து, அவர்களை மீண்டும் நடமாட வைப்பதுதான் இந்த திரைப்படங்களின் மையக்கரு. இதுபோன்ற திரைப்படங்களை நாமும் பொழுதுபோக்காக பார்த்துவிட்டு வந்திருப்போம். ஆனால் அது வெறும் படத்துக்காக புனையப்பட்ட கட்டுக்கதை அல்ல; உண்மை எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கேமராவில் சிக்கிய 'ஜோம்பி' வண்டு
இதனை மெய்ப்பிக்கும் விதமாக கேமராவிலேயே ஒரு சம்பவம் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோவில், அமேசான் காட்டில் பல நாட்களுக்கு முன்பு இறந்து போன ஒரு ராட்சத வண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த வண்டின் மேற்புறத்தோல் எல்லாம் சிதிலமடைந்து வயிற்றுக்குள் எந்த உள்ளுறுப்புகளும், ரத்தமும் இல்லாமல் வெற்றிடமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. அந்த வீடியோவுக்கு கீழே பலரும் ஜோம்பி இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஞ்ஞானிகள் விளக்கம்
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள உயிரியல் விஞ்ஞானிகளும் இது ஜோம்பி வண்டுதான் எனக் கூறியுள்ளனர். அதாவது, நம் உலகில் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்கு புலப்படாத பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. அதில் ஃபங்கஸ் (fungus) எனப்படும் நுண்ணுயிரியும் ஒன்று. உதாரணமாக, பிரெட், பன், பீர் ஆகியவற்றை தயாரிக்க பயன்படும் ஈஸ்ட்டும் ஒரு வகை ஃபங்கஸ்தான். அவ்வளவு ஏன்.. நம் உடலில் தொடைப்பகுதிகளில் வரும் படை, படர்தாமரை போன்ற அரிப்புகளும் ஃபங்கஸ் நுண்ணுயிரிகளால் ஏற்படுபவை தான்.

பயங்கர ஃபங்கஸ் நுண்ணுயிரி
இந்த ஃபங்கஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் 'கோர்டிசெப்ஸ்' என அழைக்கப்படுகிறது. இந்த வகை ஃபங்கஸ் பெரும்பாலும் அடர்ந்த காடுகளில் காணப்படும். மிகவும் அரிதானதும் கூட. இந்த கோர்டிசெப்ஸ் வகை ஃபங்கஸ், பெரும்பாலும் இறந்த பூச்சிகளை தாக்கி அதனுடைய உடல் செல்களை உணவாக உட்கொள்ளும். அப்படி ஒரு இறந்த பூச்சியை தாக்கும் இந்த ஃபங்கஸ்கள், அதன் மூளை நரம்புகளுக்குள் நுழைந்து மத்திய நரம்பு மண்டலத்தை (central nervous system) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். இதனால்தான் விஞ்ஞானிகள் இந்த ஃபங்கஸ் நுண்ணுயிரியை 'நியூரோபாராசைட்' என அழைக்கின்றனர்.

இறந்த பின்னும் நடக்கும் பூச்சிகள்
பூச்சியோ, மனிதனோ எந்த உயிரினமாக இருந்தாலும் அவற்றை இயக்குவது இந்த மத்திய நரம்பு மண்டலம்தான். நடப்பது, படுப்பது, சாப்பிடுவது என அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது இந்த மண்டலம்தான். இந்நிலையில், இறந்த பூச்சிகளின் மத்திய நரம்பு மண்டலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இந்த கோர்பிடெஸ் ஃபங்கஸ் கொண்டு வந்துவிடுகின்றன. பிறகு என்னவாகும்..? அந்த இறந்த பூச்சியின் மூளை, ஃபங்கஸ் சொல்வதை கேட்க தொடங்கும். இறந்துபோன பூச்சிகள் நடக்கும், இறக்கை இருந்தால் பறக்கும், பிற பூச்சிகள் உள்ளிட்டவற்றை கடிக்கும், உணவு உண்ணும். இவை எல்லாம் அந்த பூச்சி உயிர் இல்லாமலேயே செய்யும். அதுதான் நினைக்கவே பயமாகவும், கொடுமையாகவும் இருக்கிறது. இதில் மற்றுமொரு பயங்கர விஷயம் என்னவென்றால், அந்த பூச்சியால் கடிக்கப்படும் மற்ற பூச்சிககளுக்குள்ளும்ம் இந்த கொடூர ஃபங்கஸ் புகுந்துவிடும்.
|
எத்தனை நாள் நடமாடும்?
அதெல்லாம் சரி.., இந்த ஃபங்கஸ் தாக்கிய இறந்த பூச்சி, எத்தனை நாட்களுக்கு இதுபோல நடமாட முடியும்? அந்த பூச்சியின் உடல் முழுமையாக அழிந்து போகும் வரை அது நடக்கும். எல்லாம் செய்யும். ஒருவேளை, கால்கள் அழிந்துபோனால் கூட உருண்டு கூட செல்லும். அந்த பூச்சி முழுமையாக அழிந்த பின்னரே, அந்த ஃபங்கஸ்கள் வேறொரு இறந்த பூச்சியை தேடி காற்றுடன் காற்றாக பறந்து செல்லும். இன்னும் சில வகை கோர்டிசெப்ஸ் ஃபங்கஸ்கள் மிக அரிதாக உயிருடன் இருக்கும் எறும்பு, வண்டு, கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளை தாக்கி, சிறிது நாட்களில் அவற்றை கொன்று இப்படி ஜோம்பி பூச்சிகளாக மாற்றிவிடும். பூச்சிகளின் உலகம் விசித்திரமானது மட்டுமல்ல. பயங்கரமாகவும் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, நல்ல வேளை மனிதர்களாக பிறந்தோம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications