ட்விட்டரை பயன்படுத்த ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம்.. இனி இதெல்லாம் பண்ண முடியாது.. எலான் மஸ்க் அதிரடி
நியூயார்க்: எக்ஸ் (ட்விட்டர்) பயன்படுத்த விரைவில் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகிறது. ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்தினால் தான் ட்விட்டரை பார்க்கும் வகையில் புதிய திட்டம் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் அக்டோபர் 17 தேதி முதல் தொடங்கி உள்ளது."நாட் எ பாட்" எனப்படும் புதிய சோதனையை எக்ஸ் தளம் தொடங்கி உள்ளது.
இந்த திட்டப்படி ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்தாதவர்கள் இனி லைக் மற்றும் கமெண்ட் போட முடியாது, மேலும் ஆண்டு கட்டணம் செலுத்தாதவர்கள் ட்வீட் போடுவது, புக் மார்க்கிங் செய்வதும் முடியாது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், போலியான ட்வீட் பதிவினை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், ட்விட்டரில் போலி கணக்குகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளருமான எலான் மஸ்க் ட்விட்டர் எனப்படும் மிகப்பிரபலமான சமூகவலைதளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறியது முதலே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் பலரையும் வேலையை விட்டு அனுப்பினார். அதேநேரம் ட்விட்டரை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க விரும்பிய அவர், 'ப்ளூ டிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார். இதன்படி மாதந்தோறும் 566 ரூபாய் இந்தியாவில் புளு டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் ட்விட்டரில் மானிடைசேசனை ஆன் செய்துள்ள எலான் மாஸ்க், ட்விட்டரில் வீடியோ மற்றும் கருத்துக்கள் பதிவிடுவோருக்கு பேஸ்புக் மற்றும் யூடியூப் போல் பணமும் தருகிறார். ஆனால் இந்த திட்டத்தில் சேரவும் ப்ளூ டிக் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ப்ளூ டிக் வசதி உள்ளவர்கள் நீண்ட பதிவினை போட முடியும். ஹெச்டி வீடியோக்கள் பதிவிட முடியும்.நீண்ட நேர வீடியோக்களையும் பதிவிட முடியும்.
இப்போது வரை தனிநபர்கள் அதாவது ப்ளு டிக் அல்லாதவர்கள் பணம் செலுத்தாமல் ட்விட்டரை பயன்படுத்த முடியும். கருத்து பதிவிட, கமெண்ட் போட என எதற்கும் பணம் இல்லை. இந்த சூழலில் போலி ட்விட்டர் கணக்குகளை தடுக்கவும், போலியானவர்கள் ட்வீட் மற்றும் கமெண்ட் போடுவதை தடுக்கவும் விரும்பிய எலான் மஸ்க், அதற்காக புதிய திட்டத்தை கொண்டு வர விரும்புகிறார். அந்த திட்டம் தான் பணம் செலுத்தி ட்விட்டரை பயன்படுத்தும் திட்டம்.
இந்த எக்ஸ் எனப்படும் இந்த ட்விட்டரை பயன்படுத்த ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும். அப்படி உறுப்பினர் ஆனவர்கள் தான் இனிமேல் புதிய ட்வீட் போட முடியும். கமெண்ட்போட முடியும். லைக் போட முடியும். புக் மார்க் செய்ய முடியும்.
"நாட் எ பாட்" என்று அழைக்கப்படும் இந்த சோதனை, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் அக்டோபர் 17 (நேற்று) தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டு கட்டணம் செலுத்தாதவர்கள் லைக் போடவோ, கருத்து பதிவிடவோ, புக்மார்க்கிங் செய்யவோ முடியாது. மேலும் "quotes" பட்டனையும் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தூக்க போகிறது. மேலும் பல்வேறு செயல்பாடுகளும் குறைக்கப்பட்டுள்ளது. மேலே சொன்ன விஷயங்களுக்கான பொத்தான்களையும் எக்ஸ் தளம் நீக்குகிறது. கட்டணம் செலுத்தாதவர்கள் இவ்வளவு ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையையும் உருவாக்க போகிறது .












Click it and Unblock the Notifications