நியூயார்க்கில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது... ஒரே நாளில் 671 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க்கில் 671 பேர் கொரோனாவால் இறந்தனர் என்று அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்தார் . மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக தான் நம்புவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 577,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 17,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 23086 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு நாளில் மட்டும் 981 பேர் இறந்துள்ளனர். இதுவே உலகில் ஒரு நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மிக அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும்

அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நியூயார்க்கில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,056 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் கொரோனாவால் 195031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 5616 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது அங்குநேற்று ஒரு நாளில் மட்டும் 566 பேர் இறந்தனர் ஒட்டுமொத்தமாக 20465 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 280 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு இதுவரை 17489 பேர் இறந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications