Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பின் அடுத்த குறி வடகொரியா? கிம் ஜாங் எடுக்கும் அதிரடி முடிவு! மீண்டும் அணுஆயுத போர் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இஸ்ரேல் - ஈரான் போரில் திடீரென்று நுழைந்த அமெரிக்கா, ஈரானின் முக்கிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தங்களின் அணுசக்தி நிலையங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இது இஸ்ரேல் - அமெரிக்காவுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் அடுத்த குறி அணுஆயுதம் கொண்டு மிரட்டும் வடகொரியாவா? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்கா - வடகொரியா மோதினால் அது அணுஆயுத போர் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நிபுணர்கள் வார்னிங் செய்துள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகள் இடையே இருந்த நீண்டகால மோதல் போராக மாறியது. இருநாடுகளும் மாறி மாறி ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது. அதுமட்டுமின்றி திடீரென்று அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

us north korea donald trump

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனை இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் விரும்பவில்லை. இதனால் தான் இருநாடுகளும் சேர்ந்து ஈரானின் அணுஆயுத திட்டத்துக்கு உதவும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நியைலங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் ஃபோர்டோ என்பது பூமிக்கடியில் அமைக்கப்பட்ட அணுசக்தி நிலையமாகும். இதனால் அதனை அழிக்க அமெரிக்கா தனது பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்களை பயன்படுத்தி 13,600 கிலோ எடையுள்ள GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (MOP) எனும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இது வெடிப்பதற்கு முன்பு 200 அடி வரை செல்லும். அதன்பிறகு தான் பயங்கர சத்தத்துடன் வெடித்து மொத்த கட்டமைப்புகளையும் சிதைக்கும். அதேபோல் பிற 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரான் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட 3 இடங்களும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் மூலமாக ஈரான் தனது அணுஆயுத தயாரிப்பு பணியில் 10 ஆண்டுகள் பின்னுக்கு சென்றுள்ளது'' என்றார். அதேபோல் ஈரானும் கூட ‛‛அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் அணுசக்தி நிலையங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. இதற்கான இழப்பீட்டை ஐநாவில் கோர உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் அணுஆயுதத்தால் தங்களுக்கு 2 நாடுகள் மூலம் பெரும் ஆபத்து என்று நினைக்கிறது. ஒன்று ஈரான். ஈரானிடம் தற்போது அணுஆயுதம் இல்லை. அந்த நாடு அணுஆயுதத்தை தயாரித்தால் அது சிக்கலாகிவிடும் என்பதால் அதனை முடக்க டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வந்து தற்போது தாக்குதலை நடத்தி உள்ளார். இன்னொரு நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருக்கிறார். அமெரிக்கா - வடகொரியா இடையே மோதல் போக்கு உள்ளது. வடகொரியாவிடம் தற்போது அணுஆயுதம் உள்ளது. 50 அணுஆயுதங்களை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் தொடர்ச்சியான மிரட்டால் வடகொரியா அணுஆயுதத்தை தயாரித்துவிட்டது. அதுமட்டுமின்றி அவ்வப்போது அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டலையும் வடகொரியா விடுத்து வருகிறது.

இதனால் வடகொரியா, அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. வட கொரியா ஏற்கனவே மேம்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) வைத்துள்ளது. அமெரிக்காவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா தயாரித்துள்ளது. இது அமெரிக்காவை தூங்கவிடாமல் செய்கிறது. இதனால் அடுத்தக்கட்டமாக டிரம்ப், வடகொரியாவை குறிவைக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரனின் அணுசக்தி திட்டத்தை தங்களின் பி2 பாம்பர்ஸ் விமானத்தை வைத்து அமெரிக்க அழித்ததை போல் வடகொரியாவையும் முடக்க டிரம்ப் நினைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை எதிர்க்க வெறும் படை பலம் மட்டும் போதாது. ஆயுத பலம் தான் வேண்டும். குறிப்பாக அணுஆயுதம் தான் அமெரிக்காவிடம் இருந்து வடகொரியாவை காக்கும் என்று கிம் ஜாங் உன் நினைக்கிறார். இதனால் அவர் தனது நாட்டின் அணுஆயுதம் சார்ந்த திட்டங்களை விரைவுப்படுத்தி வருகிறார். இதுதான் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. மேலும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் நினைக்கிறார்.

அமெரிக்காவின் இந்த உணர்வை உணர்ந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தற்போது 2 முக்கிய வேலைகளில் ஈடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒன்று வடகொரியா தனது அணுஆயுத திட்டத்தை விரைவாக்க முடிவு செய்யலாம். இரண்டாவது விஷயம் ரஷ்யா உடனான தனது நட்பை இன்னும் தீவிரமாக்க முடிவு செய்யலாம். ஈரானுக்கு நேர்ந்த கதி தங்களுக்கு அமெரிக்காவால் வந்து விடக்கூடாது என்பதில் வடகொரியா உறுதியாக உள்ளது. இதனால் இந்த 2 வேலைகளில் வடகொரியா ஈடுபட வாய்ப்புள்ளது.

மேலும் உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்காக ஏற்கனவே வடகொரியா 14 ஆயிரம் வீரர்களை அனுப்பியது. முக்கிய ஆயுத உதவிகளையும் ரஷ்யாவுக்கு வழங்கியது. அதேபோல் கைமாறாக ரஷ்யா வான்வெளி எதிர்ப்பு எவுகணைகள், மின்னணு போர் தொழில்நுட்பங்களை வழங்கி உள்ளது. இப்படி இருநாடுகள் இடையே உறவு வலுவாக உள்ளது. இனி இன்னும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட வடகொரியா திட்டமிடலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். ரஷ்யாவிடமும் அணுஆயுதம் உள்ளது. இதனால் அமெரிக்கா - வடகொரியா இடையேயான மோதல் என்பது உலகில் அணுஆயுதம் தொடர்பான பதற்றம் வரும் காலத்திலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தென்கொரியாவின் கியுங்னம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிம் இயூல்-சுலின் கூறுகையில், ‛‛ஈரான் மீதான அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தாக்குதல் என்பது வடகொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு வலு சேர்க்கும். அமெரிக்காவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் வடகொரியாவை செயல்பட வைக்கும். இதற்காக அணுஆயுத திறனை வடகொரியா மேம்படுத்தும் நிலைக்கு தள்ளப்படும். அணுஆயுதம் சார்ந்த விஷயங்களை அதிகம் வைத்திருப்பது வடகொரியாவை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்றும் என்று கிம் ஜாங் உன் நம்புகிறார். அதில் உறுதியாகவும் இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடைகளை வடகொரியா எதிர்கொள்கிறது. இப்போது ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வடகொரியாவை மாற்று வழியில் சிந்திக்க வைத்திருக்கும்'' என்றார்.

அதேவேளையில் இன்னும் சில நிபுணர்கள் அமெரிக்கா, வடகொரியாவை சீண்டாது. ஏனென்றால் இரு நாடுகளிடமும் அணுஆயுதம் உள்ளது. ஒருவேளை இருநாடுகளும் மோதினால் அது பேரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது அணுஆயுத போருக்கு வழிவகுக்கலாம். ஏற்கனவே அமெரிக்கா - தென்கொரியா நாடுகள் இடையேயான கூட்டணி வடகொரியாவை கோபப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி வட கொரியா 2024 ல் ரஷ்யாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் வடகொரியாவை அமெரிக்கா உள்பட எந்த நாடு தாக்கினாலும் உடனடியாக ரஷ்யா என்ட்ரி கொடுக்கும். இதனால் இந்த விஷயத்தில் டொனால்ட் டிரம்ப் சற்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+