அந்த பேச்சு பேசுன அமெரிக்காவுக்கு இது தேவை தான்! இப்போ என்ன செய்யப்போகிறார் டிரம்ப்?
நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன. இந்தியாவுக்கு வரி போடுவோம் என்று நீட்டி முழங்கிய டிரம்ப் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நெருக்கடிக்கு காரணம் அமெரிக்காவின் மிகப்பெரிய செமிகன்டக்டர் சிப் உற்பத்தியாளரான NVIDIA-வின் பங்குகள் சரிந்ததுதான்.

கடந்த ஜனவரி தொடங்கி இன்றுவரை NVIDIA பங்குகள் 23% வரை சரிந்திருக்கிறது. இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சரிவை நிறுவனம் எதிர்கொண்டது கிடையாது என அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3.66 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.30.37 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், ஏறத்தாழ 1 டிரில்லியன் அளவுக்கு சரிந்திருக்கின்றன. சிம்பிளாக சொல்வதெனில், நிறுவனத்தின் வர்த்தகம் படுத்துவிட்டது.
NVIDIA மட்டும் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை.. கூட சேர்ந்து ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது அமெரிக்க வர்த்தகத்தில் விழுந்த பெரிய அடி. அதுசரி, கனடா, மெக்சிகோ மீது வரி போடும்போது அந்த நாடுகள் பாதிக்கப்படுமே என்று டிரம்ப் யோசித்தாரா? இப்போது அவருக்கு இது தேவைதான்.. என்று பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
சரி இந்த சரிவுக்கு என்னதான் காரணம்? முதல் காரணமே டிரம்பின் வரி விதிப்பு கொள்கைதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவுக்கு அமெரிக்கா 20% கூடுதல் வரியை விதித்திருக்கிறது. அதாவது சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்கள் 20% கூடுதல் விலைக்கு விற்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் NVIDIA உற்பத்தி செய்யும் செமிகன்டக்டர் சிப்களுக்கு தேவையான பொருட்கள் சீனாவிலிருந்துதான் வருகிறது. எனவே இயல்பாக சிப்களின் தயாரிப்பு செலவு அதிகரித்திருக்கிறது. இது வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது காரணம் AI பங்குகளின் மதிப்பை ஆஹா, ஓஹோ என்று ஏற்றிவிட்டதுதான். கடந்த 2023-2024ம் ஆண்டு AI பங்குகள் மீது அதிக முதலீடுகள் குவிந்தன. எனவே NVIDIA நன்றாக கல்லா கட்டியது. ஒரு புள்ளியில் முதலீட்டாளர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். பணவீக்கம், வட்டி அதிகரிப்பது, பொருளாதார மந்தநிலை இருக்கும்போது ஏன் AI-ல் காசை இறைக்க வேண்டும் என்று சிந்தித்து முதலீட்டை குறைத்துக்கொண்டனர். இதனால் NVIDIA பங்குகள் பாதாளத்துக்கு சென்றுவிட்டன.
மூன்றாவது காரணம் பிரபல செமிகன்டக்டர் உற்பத்தி நிறுவனமான Marvell Technology-க்கு போதுமான அளவுக்கு போனியாகவில்லை. இதை பார்த்த முதலீட்டாளர்கள் "அவ்ளோதான் குமாரு.. AI கதை முடிஞ்சது" என நம்பினார்கள். இதனால் முதலீடுகளையும் குறைத்துவிட்டார்கள். எனவே சீட்டு கட்டு சரிவதை போல, NVIDIA உட்பட செமிகன்டக்டர் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துவிட்டன.
நான்காவது காரணம் மிக முக்கியமானது. சீனாவின் வளர்ச்சிதான் அது. NVIDIA அற்புதனமான செமிகன்டக்டர் சிப்களை உற்பத்தி செய்தது. ஆனால் தரமானவற்றை சீனாவுக்கு கொடுக்க கூடாது என அமெரிக்கா கட்டையை நீட்ட.. சீனா சொந்தமாக சிப்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. இன்னைக்கு சந்தையில் சீனாதான் டாப்! எனவே இயல்பாக NVIDIA அடிவாங்க தொடங்கியது.
அடிவாங்கியது NVIDIA மட்டும் கிடையாது, அமெரிக்க பொருளாதாரமும்தான். இந்தியர்களை கைதிகளை போல அனுப்பியது, வரி போடுவேன் என மிரட்டியது என எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து டிரம்ப் தற்போது அனுபவித்து வருகிறார். அவருக்கு இது தேவைதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த சரிவு மூலம் இந்திய செமிகன்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் மற்றும் வேதாந்தா ஆகியவற்றின் காட்டில் முதலீடு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கறீர்கள் வாசகர்களே!
-
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications