இதுதான் நரகமா? ஒரே ரயில் விபத்தால் கருப்பாக மாறிய வானம்! இப்படி ஒரு போட்டோவை பார்த்திருக்க மாட்டீங்க
ஒகையோ மாகாணத்தில் இருக்கும் ஒகையோ ஆற்றில் இந்த கெமிக்கல் கலந்து உள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மக்கள் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் இருக்கும் கிழக்கு பாலஸ்தீனத்தில்தான் கடந்த பிப்ரவரி 3ம் தேதி ரயில் தடம்புரண்டது. இது சாதாரண ரயில் தடம்புரளும் விபத்துதான்.
அங்கு உள்ள நோர்ப்பிலோக் சதர்ன் என்று ரயில்தான் தடம் புரண்டது. இதில் மொத்தம் 50 பெட்டிகள் இருந்துள்ளன.

பலி எண்ணிக்கை
ரயில் தடம் புரண்ட போது அதனால் யாரும் பலியாகவில்லை. ஆனால் இந்த ரயில் விபத்து எதிர்பார்க்காத மிகப்பெரிய பேரழிவை தற்போது ஒகையோ மாகாணத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயிலின் சரக்கு பெட்டிகள் முழுக்க முழுக்க அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் இருந்துள்ளன. இந்த ரயில் பெட்டிகளில் வினைல் குளோரைடு, பியூட்டைல் அக்ரிலைட் இரண்டும் திரவ நிலையில் இருந்துள்ளன. ரயில் பெட்டிகள் விழுந்ததும் அதில் இருந்து திரவ கெமிக்கல்கள் வெளியேறி அருகில் இருந்த நீர் நிலைகளில் கலந்துள்ளன. இன்னொரு பக்கம் பெட்டிகள் தடம் புரண்டதும் உடனே ஒரு பெட்டி வெடித்துள்ளது. இதனால் மீதம் உள்ள பெட்டிகளை அங்கிருந்து எடுப்பது சிரமம் ஆகி உள்ளது. அதோடு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மோசமான நிலை
ஒகையோ மாகாணத்தில் இருக்கும் ஒகையோ ஆற்றில் இந்த கெமிக்கல் கலந்து உள்ளது. இதனால் அந்த நதி மொத்தமாக கெமிக்கல் கலந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது.இதனால் நீரில் இருக்கும் மீன்கள் மட்டுமின்றி அங்கே பறவைகள், விலங்குகள் கூட பலியாக தொடங்கி உள்ளன. இதற்கு காரணம் அங்கே நிலவும் புகை. இந்த நச்சு கெமிக்கல் மேலும் நீரில் கலப்பதை தடுக்க வினைல் குளோரைடை கொஞ்சம் கொஞ்சமாக தீ வைக்க ஒகையோ மாகாணம் முடிவு செய்தது. இதனால் அந்த கெமிக்கல் எரிந்து தற்போது பாஸ்ஜீன் மற்றும் ஹைட்ரஜன் குளோரைடு ஆக மாறி உள்ளது. பாஸ்ஜீன் என்பது மிகவும் நச்சுதன்மை கொண்ட வாயு ஆகும்.

மோசமான நிலை
ஒகையோ மாகாணத்தில் ஏற்பட்ட இந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மக்கள் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அதன்படி வானத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும் ஆசிட் மேகக்கூட்டத்தின் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அருகே விமானத்தில் பறந்த மக்கள் அந்த போட்டோக்களை எடுத்து வெளியிட்டு உள்ளனர். வானத்திற்கு மேலே கருப்பு நிறத்தில் நரகம் போல இந்த பகுதி காட்சி அளிக்கிறது. அந்த மாகாணம் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது இந்த ஒற்றை புகைப்படம் மூலம் உறுதியாகி உள்ளது.

பிரச்சனை
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது பாஸ்ஜீன் மற்றும் ஹைட்ரஜன் குளோரைடு வாயுக்களின் கூட்டம் ஆகும், இது வாந்தி மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். முதல் உலகப் போரில் இது கெமிக்கல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. மக்களை மயக்கம் அடைய செய்ய குண்டுகளில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஹைட்ரஜன் குளோரைடு காற்றில் உள்ள நீரில் கலந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டாக மாறும் . இது கண்கள், தோல் மற்றும் மேல் சுவாச அமைப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தும். கூடுதலாக, மக்களின் உணர்திறனை பாதிக்கும், தோல் அழற்சி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இப்போது அங்கே தீ வைக்கப்பட்டு உள்ளதால் காற்று ஹைட்ரோ குளோரிக் கலந்து மேகங்களாக சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications