நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போரை நிறுத்த ஒரே வழிதான்.. அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்க திட்டம்.. பரபரக்கும் நாடாளுமன்றம்!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்

    நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறார்கள்.

    ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் விரைவில் போராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

    ஈரானுடன் சண்டை.. முக்கியமான நேரத்தில் டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் பேச்சு.. என்ன பின்னணி?ஈரானுடன் சண்டை.. முக்கியமான நேரத்தில் டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் பேச்சு.. என்ன பின்னணி?

    ஈரான் போர்

    ஈரான் போர்

    டிரம்ப் ஈரானுக்கு எதிரான போருக்காக மிக தீவிரமாக தயார் ஆகிக்கொண்டு இருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு போன வாரம்தான் 3000 படை வீரர்களை கூடுதலாக அனுப்பினார். இன்னும் கூடுதல் படை வீரர்களை அனுப்பும் திட்டத்தில் டிரம்ப் இருக்கிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    ஈரான் போர்

    ஈரான் போர்

    டிரம்ப் ஈரானுக்கு எதிரான போருக்காக மிக தீவிரமாக தயார் ஆகிக்கொண்டு இருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு போன வாரம்தான் 3000 படை வீரர்களை கூடுதலாக அனுப்பினார். இன்னும் கூடுதல் படை வீரர்களை அனுப்பும் திட்டத்தில் டிரம்ப் இருக்கிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    செயல் எப்படி

    செயல் எப்படி

    இந்த நிலையில் டிரம்ப்பின் இந்த செயலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பிரநிதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வர இருக்கிறார்கள். அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில், போரை தடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வர உள்ளனர்.

    பிறப்பிக்க முடியாது

    பிறப்பிக்க முடியாது

    தற்போது டிரம்பிற்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் சக்தி தற்போது முழுமையாக இருக்கிறது. அதை குறைத்து, அவர் காங்கிரஸ் அவையின் கட்டுப்பாடு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். அதவாது காங்கிரஸ் அவை அனுமதிக்காமல் அவரால் ராணுவத்திற்கு ஆணைகளை பிறப்பிக்க முடியாது. இதற்கான தீர்மானத்தை இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    நாடளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சிதான் இந்த தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வென்றுவிட்டது. இதற்கு எதிரான வாக்கெடுப்பு விசாரணை விரைவில் செனட் சபையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Only Way to Stop the War: US assembly will pass a resolution to decrease President Trump's power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X